USA ன் THAAD வான் பாதுகாப்பு: தூக்கி சாப்பிட்ட சீனா!
அமெரிக்காவின் ‘தாட்’ (THAAD) வான் பாதுகாப்பு சாதனம்தான் உலகத்திலேயே சிறந்தது என்று பேசப்பட்டு வரும் நிலையில், அதை காலி செய்யும் அளவுக்கு பிரமாண்ட வான் பாதுகாப்பு சாதனத்தை ‘HQ 19’ என்கிற பெயரில் சீனா உருவாக்கியிருக்கிறது.
‘தாட்’ வான் பாதுகாப்பு அம்சத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஈரானுடன் நடந்த போரில் இதன் தேவை அதிகமாக இருந்தது. ஆனால், இது முற்றிலும் பாதுகாப்பான சாதனம் கிடையாது என்பதும், இதே போரல் நிரூபணமானது.
அதாவது, ஏமன் வீசிய ‘Palestine -2’ மற்றும் ஈரான் வீசிய ‘Fattha’ ஆகிய ஹைபர்சோனிக் ஏவுகணைகளை ‘தாட்’ கோட்டை விட்டுவிட்டது.

ஏவுகணையை தடுக்கும் வேகம் விநாடிக்கு 2.8 கி.மீ என்கிற அளவில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது சீனா தயாரித்துள்ள ‘HQ 19’ வான் பாதுகாப்பு சாதனம் விநாடிக்கு 10 கி.மீ என்கிற அளவில் பயணிக்கும். ஒப்பீட்டளவில் பார்த்தால்
தாட் – 150 கி.மீ உயரம் போகும்
HQ 19 – 200 கி.மீ உயரம் போகும்
*****
தாட் – 200 கி.மீ சென்று அழிக்கும்
HQ 19 – 1,000 கி.மீ சென்று அழிக்கும்
*****
தாட் – 3000 கி.மீ கண்காணிக்கும்
HQ 19 – 4,000 கி.மீ கண்காணிக்கும்
ஹைபர்சோனிக் ஏவுகணைகள் மட்டுமல்லாது, வான்வெளியில் தாழ்வாக பயணிக்கும் செயற்கைக்கோள் வரை தாக்கும் நோக்கத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பலம் வாய்ந்த சாதனத்தை ஈரான் உள்ளே கொண்டு வந்து விட்டால், பிறகு உலகப் போருக்கு ஆசியா தயாராகி விடும் என்று சொல்லப்படுகிறது.
சீனாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 1990களின் இறுதியில் ‘863’ எனும் பெயரில் ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முதலில் ‘HQ-9’ எனும் வான் பாதுகாப்பு சாதனம் உருவாக்கப்பட்டது.
1999ல் இதன் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதாவது 200 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து வினாடிக்கு 10,000 மீட்டர் வேகத்தில் வரும் ஏவுகணைகளை இதனால் தடுக்க முடிந்தது. இதன் மேம்பட்ட வடிவம்தான் ‘HQ 19’.
இது ‘KKV’ வகையை சேர்ந்ததாகும். ராக்கெட் போல உள்ள இந்த வான் பாதுகாப்பு அம்சத்தில் எந்த வெடிபொருளும் இருக்காது. வெடி பொருள் மட்டுமல்ல எரியூட்டும் பொருட்கள், ரசாயனங்கள் அல்லது கதிரியக்கப் பொருட்கள் என எதுவும் இருக்காது. வெறுமென வேகமாக மோதி இலக்கை அழிக்கும். இதைத்தான் ‘KKV’ என்று சொல்வார்கள். இது எப்படி சாத்தியம் என்று சந்தேகம் எழலாம்.
விநாடிக்கு 10 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒரு பொருள் ஒரு பெரிய அளவு TNT வெடிமருந்து ஏற்படுத்தும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வான் பாதுகாப்பு அம்சம் தொடர்பாக வேறு எந்த தகவல்களும் பொதுவெளியில் பகிரப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டே இதனை சீனா தனது ராணுவத்தில் பயன்படுத்த தொடங்கிவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.