FIFA 2022: | பிரான்ஸை வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியோடு வெளியேறியது துனிசியா

Soccer Football - FIFA World Cup Qatar 2022 - Group D - Tunisia v France - Education City Stadium, Al Rayyan, Qatar - November 30, 2022 Tunisia's Wahbi Khazri in action with France's Eduardo Camavinga REUTERS/Marko Djurica

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்தி உள்ளது துனிசியா. இது அந்த அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். ஆனாலும் அந்த முதல் சுற்றவடு வெளியேறி உள்ளது.

 

இந்த போட்டியில் பிரான்ஸ் அணி அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக் கொடுக்கவில்லை. கடைசி நிமிடத்தில் கிரிஸ்மேன் கோல் பதிவு செய்து அசத்தினார். அது ஆப் சைடு என்பது விஏஆர்-ல் உறுதி செய்யப்பட்டது. அதனால் கடையில் வெற்றி பெற்றது துனிசியா.

குரூப் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் துனிசியா அணிகளுக்கு இதுதான் முதல் சுற்றில் கடைசி போட்டியாகும். துனிசியா வெற்றி பெற்றாலும் அது ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் இடையிலான போட்டியின் முடிவை பொறுத்துதான் இருக்கும் என சொல்லப்பட்டது.

குறிப்பாக அந்த போட்டி டிராவில் முடிந்தால் துனிசியா அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆனால் அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதனால் வெற்றியுடன் வெளியேறியது துனிசியா.

இந்த போட்டியில் பிரான்ஸ் அணி தனது விளையாடும் வீரர்களை அதிக அளவில் மாற்றி இருந்தது. தோல்வியை தழுவி இருந்தாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை ஏற்கனவே பிரான்ஸ் அணி உறுதி செய்திருந்தது.

Previous Story

இலங்கைக்கு  போதைப்பொருள் கடத்தல்: தி.மு.க உறுப்பினர்கள் இருவர் கைது

Next Story

“ஒபாமாவிடம் இப்படி கேட்பீர்களா?” -  நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ஆவேசம்