A/L பரீட்சை: முதலிடம் பிடித்தோர்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகிய நிலையில்  முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் வெளியாகின | 2023 Gce Al Exam Result Release Date

முதலிடம் பிடித்தோர் விபரம்

இதன்படி, பௌதீக விஞ்ஞானப் பிரிவில் ஆனந்தா கல்லூரியின் சிரத் நிரோத முதலிடம் பிடித்துள்ளார்.

அத்துடன், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் கினிகத்ஹேன மத்திய கல்லூரியின் செஹானி நவோத்யா முதலிடம் பிடித்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியின் உபனி லெனோரா முதலிடம் பிடித்துள்ளார்.

கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த தசுன் ரித்மிகா விதானகே முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, பாணந்துறை மகளிர் கல்லூரி மாணவி ஷெஹாரா சிதுமினி புஞ்சிஹேவா வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

உயிர் முறைமைகள் தொழிநுட்பம் பிரிவில் முதலாம் இடத்தை எஹலியகொட மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் கிருலு ஷில்திய பலியகுரு பெற்றுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியிருந்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Previous Story

ஆபாச நடிகைக்கு பணம்! வழக்கில் டிரம்ப் குற்றவாளி !

Next Story

முஸ்லிம் மாணவிகளின் A/L பெறுபேறு இடைநிறுத்தம் - இனப் பாகுபாட்டின் உச்சம்!