A/L பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பரீட்ச்சர்த்திகளுக்கு அவசர கோரிக்கை ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் நேரம் தொடர்பான போலி நேர அட்டவணையொன்று இணையத்தளத்தில் பகிரப்பட்டு வருவதாகவும் அந்த போலி அட்டவணை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் அனைத்து தினங்களிலும், காலை 8:30க்கு பரீட்சைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், வெள்ளிகிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை வேளைகளில் பிற்பகல் 1:00க்கு (13:00) பரீட்சைகள் ஆரம்பமாகும்.

வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் பிற்பகல் 2:00 மணிக்கு (14:00) பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளது.

இந்த பரீட்சையுடன் தொடர்புடைய சரியான நேர அட்டவணையை, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்துப் பதிவிறக்கம் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள

பாடசாலை பரீட்சை ஏற்பாட்டு கிளை : 011-2784208 / 011-2784537

அவசர தொலைபேசி இலக்கம் :- 1911

பெக்ஸ் :- 011-2784422

Previous Story

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் -றோ!

Next Story

ஏமாற்றுத் தந்திரமும் ஜெனீவா மந்திரமும்!