“அவசர ஆப்ரேஷன்!” புதின் உடல்நிலை எப்படி?

புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பகீர் தருவதாகவே உள்ளது. இதை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தாலும் கூட, இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தே வருகிறது.

சர்வதேச அரங்கில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் புதின். இந்தாண்டு தொடக்கம் முதலே இவர் தொடும் எல்லா விஷயங்களும் வெற்றியில் தான் முடிந்துள்ளது. ரஷ்யாவில் அசைக்கவே முடியாத சக்தியாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்தார்.

ஆனால், இந்தாண்டு தொடக்கம் முதல் புதினுக்கு நேரம் சரி இல்லை போல. அவருக்குச் சிக்கல் மேல் சிக்கல்கள் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் அவர் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்துப் பரவும் தகவல்களும் பகீர் தருவதாகவே உள்ளது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

முதலில் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அது பெரும் பின்னடைவையே கொடுத்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய போதே, சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர எந்தவொரு நாடும் புதினை ஆதரிக்கவில்லை. மேலும், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது ஒரு பக்கம் இருக்க உக்ரைனில் பல மாதங்களாகப் போர் தொடர்ந்த போதிலும், ரஷ்யாவால் வெல்ல முடியவில்லை. சொல்லப்போனால் தொடக்கக் காலத்தில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களைக் கூட அது இப்போது இழந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

உருண்டு விழுந்த புதின்

உருண்டு விழுந்த புதின்

இது ஒரு பக்கம் என்றால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதின் உடல்நிலை பகீர் அளிப்பதாகவே உள்ளது. இம்மாத தொடக்கத்தில் அதிபர் மாளிகையில் மாடிப் படிக்கட்டுகளில் இருந்து புதின் தவறிவிழுந்ததாகத் தகவல் வெளியானது. ஐந்து படிகள் உருண்டு புதின் விழுந்ததாகவும் இதனால் அவருக்குக் காயமடைந்த நிலையில், பாதுகாவலர்கள் உதவியில் தான் அவரால் எழுந்தே நிற்க முடிந்ததாகத் தகவல் வெளியானது. புதினுக்கு பெருங்குடலில் பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், இந்தச் சம்பவத்தால் அவர் தனிச்சையாக மலம் கழிக்க நேர்ந்ததாகவும் தகவல் வெளியானது.

வெளியே வரவில்லை

வெளியே வரவில்லை

70 வயதான புதின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா பாதுகாப்புத் துறையில் இருக்கும் அதிகாரியும் கூட இத்தகவலை உறுதி செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. புதின் கீழே விழுந்ததாகத் தகவல் வெளியான பிறகு, அவர் சில நாட்கள் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை அவர் கிர்கிஸ்தான் அதிபர் சடிர் ஜாபரோவை சந்தித்திருந்தார்.

பின்தொடர்ந்த உதவியாளர்

பின்தொடர்ந்த உதவியாளர்

இது தொடர்பாக வெளியான வீடியோவிலும் கூட புதின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பது தெரிவதாகச் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் தனது விமானத்தை விட்டு இறங்கி மிக மெதுவாகவே சென்று ஜாபரோவை வரவேற்றார். இந்த சந்திப்பு முழுக்க ரஷ்ய அதிபரை அவரது உதவியாளர் நெருக்கமாகப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார். பொதுவாக எந்தவொரு நபரும் புதினுக்கு இவ்வளவு தூரம் அருகே இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி முழுக்க புதினுக்கு மிக அருகே அவரது இந்த உதவியாளர் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.

அவசர ஆப்ரேஷன்

அவசர ஆப்ரேஷன்

இதற்கிடையே புதினுக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்குப் பெருங்குடல் பகுதியில் பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. இந்தச் சூழலில் கடந்த வாரம் அவர் படியில் இருந்து கீழே விழுந்த நிலையில், உடனடியாக புதினுக்கு பெருங்குடலில் ஆப்ரேஷன் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது எளிய அறுவை சிகிச்சை இருக்கும் டெலிகிராம் வாயிலாக புதின் உடல்நிலை குறித்த ரகசியமாக ஆங்கில ஊடகங்களுக்கு தகவல்களைத் தரும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

என்ன சொல்லி இருக்கிறார்

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “கடந்த வாரம் படிக்கட்டுகளில் இருந்து புதின் விழுந்ததால் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. நேரடியாக இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட நேரடியாகத் தொடர்பில்லாத சில பாதிப்புகளை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெகு விரைவில் அவருக்குப் பெருங்குடலில் ஆப்ரேஷன் செய்யவும் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்” என்றார். ரஷ்ய அதிபர் குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மறுப்பு

மறுப்பு

புதின் குறித்து வெளியாகும் இதுபோன்ற தகவல்களை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தாலும் கூட, இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தே வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் சில வாரங்களுக்கு முன்பு கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் சந்தித்திருந்தார். அப்போது அவரது கைகள் நீல நிறத்தில் இருந்தது. தீவிர சிகிச்சை சமயத்தில் மருந்துகள் நேரடியாக நரம்பிற்கு அளிக்கப்படும் நிலையில், அந்த ஐவி டிராக் மார்க்குகளும் புதின் கைகளில் இருந்தன. இதற்கிடையே புதினுக்கு கேன்சர் இருப்பதாகவும் இதனால் அவர் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

Previous Story

ஜமால் கஷோகி கொலை | சவுதி இளவரசர் மீதான வழக்கு தள்ளுபடி:

Next Story

அழுத ரொனால்டோ.. உருகும் ரசிகர்கள் -இனி சான்ஸே இல்ல!