-நஜீப்-
நமது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ ஜனாதிபதியாகும் கதை இது. அரசியல்வாதிகள் வாய்க்கு வந்தபடி எதையும் பேசலாம்.! நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரப்பிரசாதங்களைப் பாவித்து எந்த பொய்களை வேண்டுமானாலும் அங்கு பேச முடியும்.
இதனால் இன்று அரசியல்வாதிகள் சொல்லும் கதைகளை மக்கள் மதிக்காத ஒரு நிலை நாட்டில் காணப்படுகின்றது. இது போன்ற ஒரு பேச்சை ரணில் விசுவாசியும் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தருமான ஆசு மாரசிங்ஹ ITNனில் நடந்த நிகழ்வின் பேசி மூக்குடைபட்டிருக்கின்றார்.
அங்கு தற்போதய மத்திய வங்கி ஆளுநர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகின்ற பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார் என்று போசினார். இது என்ன கதை என்று ஜேவிபி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நளின் ஜயதிஸ்ஸ திருப்பிக் கேட்ட போதும் ஆம் நந்தலால் ஜனாதிபதி வேட்பாளராகும் கனவில் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று திரும்பவும் குறிப்பிட்டார்.
சில தினங்களுக்குப் பின்னர் தான் அப்படிப் பேசியது பெரிய தவறு அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை நந்தலால் வீரசிங்ஹவிம் கேட்கின்றேன் என்று ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதை பார்க்க முடிந்தது.
நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 04.12.2022





