/

சீன – இந்திய முறுகல் பெரும் போராக மாறது!

யூசுப் என் யூனுஸ்

சீனாவும் இந்தியாவும் உலகில் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள். சீனாவில் 144 கோடி இந்தியாவில் 138 கோடி மக்கள் தொகை. அதேபோன்று இராணுவ பலத்தில் சீனாவுக்கு 3ம் இடம் இந்தியாவுக்கு 4ம் இடம். உலக இராணுவ பலத்தைக் குறியீட்டில் சொல்வதாக இருந்தால் அமெரிக்கா-0.0606 புள்ளி ர~;யா-0.0681 புள்ளி சீனா-0.0691 புள்ளி இந்தியா-0.0953 புள்ளி பாகிஸ்தான்-0.2364 புள்ளி இலங்கை-1.4661 புள்ளி. இது உலக அரங்கில் நிலை-82. பொருளாதர ரீதியிலும் நிதி வளத்திலும் இந்தியாவைவிட சீனா கணிசமாக முன்னணியில் இருந்து வருகின்றது.

இந்த இரு நாடுகளுக்குமிடையே பல்லாயிரக் கணக்கான கிலோ மீற்றர்கள் எல்லைகள். இது 4000 கிலோ மீற்றர்வரை நீண்டு செல்கின்றது. இந்த எல்லைகள் மலைகள் நதிகள் முகடுகளை மையமாக வைத்து ஒரு குத்து மதிப்புப் படி அளவீடு செய்யப்படுவதால் எல்லையில் பல இடங்களில் உனக்கா எனக்க என்ற சிக்கல்கள். பல சந்தர்ப்பங்களில் அவை தமக்குள் சண்டை போட்டும் வந்திருக்கின்றன. பெரும் அழிவுகளும் நடந்திருக்கின்றன.

இந்தக் கொடிய கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் மோதல்கள். பல கொலைகள் என்று நிலமை கட்டு மீறிப்போய்; இருக்கின்றது. சர்ச்சைக்குறிய இடத்தில் சீனர்கள் கூடாரம் போட்டிருக்கின்றார்கள். அதனை இந்திய இராணுவம் அடித்து நொருக்கிப் போட்டது. அப்போது அடிபுடிப்பட்டு அவர்கள் சற்றுப் பின் வாங்கிலும் நோமேன்ஸ் லேண்ட் என்ற இடத்திற்கு மீண்டும் வந்து சீன இராணுவம் கூடாரங்களைப் போட்டு அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முனைந்து வருகின்றது. மனித நடமாட்டமில்லாத அந்த இடம் அனைத்தையும் சீனா தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகின்றது. பேச்சுவார்ததைகள் நடந்து இருதரப்பும் நாம் முன்பு சொன்னது போல் பின் வாங்குவது என்று முடிவானாலும் அது நடக்கவில்லை.

கனரக ஆயுதங்கள் பூல்டோசர்கள் மூலம் சீனா தற்போது நோமேன்ஸ் லேண்ட் என்ற பகுதியை அபிவிருத்தி செய்யத் துவங்கி இருக்கின்றது. சாலைகளைப் போடுகின்றது நிரந்திர இராணுவ முகாம்களை அமைக்கின்றது. இது இந்தியாவுக்கு பெரிய வலியையும் அவமானத்தையும் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடையாது. நோமேன்ஸ் லோண்ட என்றாலே மனித நடமாட்டம் இல்லாத ஒரு இடமே. 1962 இந்தப் பிரதேசத்தை இந்தியா சீனாவிடம் இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தைகளின் மூலம் அது அன்று மனித சூன்னியப் பகுதி எனப் பிரகடனம் செய்யப்பட்டது. இன்று அங்குதான் 10000 க்கும் அதிகமான போர் வீரார்களையும் போர்த் தளபடங்களையும் சீனா அங்கு நிறுத்தி இருக்கின்றது. இது தவிர இன்னும் மூன்று இடங்களைக் கைப்பற்றும் ஒரு திட்டமும் சீனாவுக்கு இருக்கின்றது என்று படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றார்கள். சீனா புதிதாக ஆக்கிரமித்திருக்கின்ற இந்; இடங்களை ஆகாயத்தில் இருந்து எடுத்த படங்கள் தெளிவாக உறுதி செய்கின்றன. இது இந்திய அரசுக்கு பெருத்த நெருக்கடியை உள்நாட்டில் தற்போது ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. இராணுவத் தளைபதி நரவானே தற்போது உயர் மட்ட அரசியல் தலைவர்களுடனும் படை அதிகாரிகளுடனும் இந்த நெருக்கடிகள் தொடர்ப்பில் அவசரப் பேச்சுவார்த்தைளை நடாத்தி வருகின்றார் என்று கடைசியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடியில் இந்தியாவுக்கு உதவி சீனாவுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துடித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்தியத் தலைவர்கள் நிதான போக்குடன் அவரது கோரிக்கைகளையும் உதவ வருவதாக சொல்லும் கதைகளையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவற்றை எமக்குத் தீர்த்துக் கொள்ள முடியும் என இரு நாடுகளும் கூறி விட்டன. உலகில் சீனாவை மடக்க வேண்டுமானால் இந்தியாவை விட வேறு எந்த சிறந்த துரும்புச் சீட்டும் அமெரிக்காவுக்குக் கிடையாது. ஆனால் இன்றைய அமெரிக்க தலைவர் டரம்பைப் போன்று இந்தியத் தலைவர்கள் முட்டால்கள் அல்ல. அவர்களிடத்தில் முதிர்ச்சி இருக்கின்றது. எனவே அமெரிக்க என்னதான் வழிந்து வந்தாலும் அவர்கள் மிகவும் நிதானமாக காரியம் பார்த்து வருகின்றார்கள்.

அதேபோன்று உலகில் தீர்க்கமான சக்தியாக இருக்கின்ற ரஸ்யா இந்த நெருக்கடியில் இந்தியா பக்கம். போர் என்று வந்தால் அது இந்தியாவை ஆதரிக்கும் என இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன. இது முட்டால்தனமான ஒரு கற்பணை என்பது எமது கருத்து. ரஸ்யா ஒரு போதும் எந்தவொரு பக்கத்தையும் எடுக்க மாட்டாது என நாம் உறுதியாக நம்புகின்றோம். இந்தியாவைப் போல் சீனாவும் ரஸ்யாவுக்கு நெருக்கம். மேலும் அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் சீனா ரஸ்யாவுக்கு நல்ல சகபடி. எனவே இந்த நெருக்கடியை தீர்த்து வைக்க வேண்டுமானால் ரஸ்யா நல்லதொரு பங்களிப்பை செய்யலாம் என்பது மட்டுமே இது விடயத்தில் சாத்தியமான ஒரு விடயம்.

இன்றைய உலக விவகாரங்களைப் பார்க்கின்ற போது திடீரென சீனா இந்திய எல்லையில் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றது, வன்முறையாக நடந்து கொள்கின்றது என்றால் அதற்குப் பின்னால் ஏதோ மறைக்கப்பட்ட பாரிய திட்டமொன்று அங்கு இருக்கின்றது. இது இந்திய சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் என்று நாம் கருதவில்லை. ஒரு கவனக் கலைப்புக்காகத்தான் இந்த எல்லை நெருக்கடியை சீனா ஏற்படுத்துகின்றது என்பது எமது மதிப்பீடு. சீனாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் மிகப் பெரியதோர் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்.

இந்தியாவுடன் பக்கத்தில் இருக்கின்ற அடுத்த மிகப் பெரிய நாடு பாகிஸ்தான் சீனா-இந்திய நெருக்கடியில் நிச்சயம் அது சீனா பக்கம். இந்த நெருக்கடியில் அல்லது போர் என்று வந்தால் தன்னால் சீனாவுக்கு என்னென்ன உதவிகளைச் செய்ய முடியுமே பாகிஸ்தான் அதனைச் செய்யத் தயாராகவே இருக்கின்றது. அடுத்து நேபாளம். அதுவும் தற்போது சீனாவுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றது. அங்குள்ள இடது சாரிகள் தங்களை சீனத் தேசியவாதிகள் போல் காட்டிக் கொள்வதற்கு ஆர்வமாக இருக்கின்றார்கள். தெற்கில் இலங்கை இந்தியாவைப் போல் சீனாவுக்கு மிகவும் நெருக்கமான உறவு. எனவே இந்த நெருக்கடியில் இலங்கை நடுநிலைக்கு அப்பால் எந்தக் காரியத்தையும் பார்க்க முடியாது. ஆனால் நெருக்கடியான நேரத்தில் சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. பங்ளதே~; நிலையும் இதுதான்.

நெருக்கடியான அல்லது கொந்தளிப்பான இடங்களில் எல்லையில் இருந்து படைகளை இரு தரப்பும் விலக்கிக் கொள்ள அல்ல சில கிலோ மீற்றர் பின்வாங்க வேண்டும் என்று இராணுவ மட்டத்தில் கூடிப் பேசித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் நடைமுறையில் இதுவரை அப்படி இரு தரப்பும் நடந்து கொள்ளவில்லை. எல்லையில் ஆயுதங்கள் இன்றி கையாலும் கல் பொல் என்று மோதி பல இந்திய வீரர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின் இப்படி ஒரு கொலைகளை நாம் பார்த்தது முதல் தடைவை. காரணம் ஆயுத சூன்னியப் பிரதேசத்தில் இந்த மோதல் நடந்திருக்கின்றது. எவரும் கைகளில் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்பதால், பலர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்தியத் தரப்புக்கு நடந்த சேதம் காட்சிப் படுத்ப்பட்டது. சீனத் தரப்பு சேதம் பற்றித் தகவல்கள் இல்லை.

சிவசங்கர் மேனன் இதற்கு மேல் போனால் போர் தவிர்க்க முடியாத ஒன்று. என்று கூறி வருகின்றார். இனி சீனாவுடன் பேசிப் பயனில்லை போர்தான் ஓரே தீர்வாக இருக்கும். என்று தாம் தீர்மானத்துக்கு வர இருக்கும் என்று இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் கருதுகின்றார்கள். கிழக்கு கா~;மீர் லடாக் கல்வான் பகுதியில் அத்துமீறய சீனப் படைகளைத் தட்டிக் கேற்கப் போன இடத்தில்தான் இந்த அடிதடிகள் நடந்திருந்தது.

இரு செல்வாக்கான நாடுகள் தமது எல்லை விவகாரத்தில் மோதிக் கொள்வதால் பெரும்பாலான நாடுகள் எந்தப் பக்கமும் சாராது மதில் மேல் பூனை விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றன. பூனைக்கு மனிசூடுவது யார் என்ற கதைதான் இது. பாகிஸ்தான் பிரதமர் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி ஜீ.ஆரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிராந்தியக் கொந்தளிப்புப் பற்றிப் பேசி இருக்கின்றார்.

என்னதான் சீனா-இந்திய கொந்தளிப்பு போர் என்று ஊடகங்கள் செய்தி சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒரு போதும் அவை இரண்டும் கொடூரமான-முழு அளவிலான போருக்குப் போக மாட்டாது. ஆனால் மட்டுப் படுத்தப்பட்ட தாக்குதல் வம்புக்கு இழுக்கின்ற நடவடிக்கைகள் இரு தரப்பிலும் நடக்க நிறையவே வாய்ப்பு இருக்கின்றன. உலக அரங்கில் செல்வாக்குப் பெற்று வருகின்ற இந்த இரு நாடுகளும் சின்னச் சின்னக் காரணங்களுக்காக மோதிக் கொள்ளும் அளவுக்கு முட்டால்கள் என நாம் நம்பவில்லை. இநியாவுக்கும், சீனாவுக்கும் நல்ல வளமான எதிர்காலம் உலக அரங்கில் பிரகாசமாக இருக்கின்றது.

இதற்கிடையில் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்திர உறுப்புரிமைக்குக்கு ரஸ்யா சிபார்சு செய்திருக்கின்றது. உலக சமாதானத்துக்கு இந்தியா சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும் என்று ரஸ்யா கருதுகின்றது. பல முறை இதற்கான முயற்சிகள் நடந்த போது சீனா அதனைத் தடுத்து விட்டது. ஆனால் இந்த முறை இது பற்றி ரஸ்யா சிபார்சு செய்த போது சீனா அதனை எதிர்க்கமால் இருந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கூட பாதுகாப்புச் சபையில் இரு வருடங்களுக்கு இந்தியா தற்காலிகமாக பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்தக் காலப் பகுதியிலே நிரந்திர உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள இந்தியா முயல்கின்றது. ஆனால் இறுதி நேரத்தில் சீனா என்ன பண்ணும் என்று தெரியவில்லை.

இன்று ஐ.நா.சபையில் 193 நாடுகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. துவக்க காலத்தில் 50 நாடுகள் இருந்தன இன்று அங்கத்தவ நாடுகள் எண்ணிக்கை கூடி இருப்பதால் பாதுகாப்புச் சபையிலும் உறுப்பினர் எண்ணிக்கை கூட்டப்பட வேண்டும் என்பது நியாயமானதே. இன்று ஐந்து வல்லரசுகளும் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சீனா-இந்தியக் கொந்தளிப்புப் பற்றிப் பார்ப்போம் இந்தியாவில் சீனா பொருட்களைப் பகிஸ்கரிப்பது பற்றிப் பேராட்டாம் நாடுபூராவிலும் மேலோங்கி வருகின்றது. இதன் பின்னர் சீனர்களுக்கு ஹோட்டல்களில் தங்க இடம் கொடுக்கப் போவதில்லை என்று உரிமையாளர்கள் டில்லியில் தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள். இது எந்தளவுக்கு அறிவுபூர்வமானது எப்பது தெரியாது. மக்களிடத்தில் சீனா தொடர்பான கொதிப்பும் வெறுப்பும் உச்ச கட்டத்தில் காணப்படுகின்ற அதே நேரம் தலைவர்கள் மிகுந்த நிதானத்துடன் செயலாற்றி வருவது பாராட்டத்தக்கது.

இந்த கொந்தளிப்பான நேரத்தில் பாகிஸ்தானைக் கண்காணிக்க இந்தியாவுக்கு ரஸ்யா ரடார் நிலையம் ஒன்றை வழங்க இருக்கின்றது. இது குஜராத் மாநிலத்திலுல்ல ஜெம் நகரில் அமைக்கப்பட இருக்கின்றது. ரஸ்யாவிடமிருந்து எஸ். 400 வான் பாதுகாப்புச் சாதனத்தை முன்கூட்டியே வாங்க இந்தியா முயல்கின்றது. 5.4 மில்லியம் டொலர் பெருமதியான கொடுக்கல் வாங்கள் இது. ஆனால் சீனா இதனை ஏற்கெனவே ரஸ்யாவிடம் வாங்கி தனது நாட்டில் பொருந்தியும் விட்டது. உலகில் மிகவும் சக்தி வாய்த வான் பாதுகாப்பு ஆயுதம் இது. ஆனால் திட்டமிட்ட திகதிக்கு முன்னர் இதனை ரஸ்யாவால் இந்தியாவுக்கு செய்து கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி. காரணம் கொரோனா காரணமாக அங்கு ஆயுத உற்பத்தி உற்பட அனைத்து உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

அதனை ஏற்கெனவே ரஸ்யாவிடமிருந்து வாங்கி இருக்க வேண்டிய இந்திய, தான் இதனை வாங்கினால் அமெரிக்காவின் பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு ஆளாக வேண்டி வரும் என்று அஞ்சிய இருந்ததும் பணக் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களும் இதனை முன் கூட்டி இந்தியாவால் வாங்க முடியாமல் போனதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இதற்கிடையில் சீனா, ரஸ்யா, இந்தியா வெளிவிவகார அமைச்சர்கள் வர்த்த ஒத்துழைப்புப் பற்றிப் ஒன்றாகப் பேசி இருந்தார்கள். எல்லை நெருக்கடிகளுக்கு மத்தியில் இதுவும் நடக்கின்றது. இந்தியா சீனாவின் 80 வகையான பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்து அதன் நுகர்வைக் கட்டுப்படுத்த முனைகின்றது. இது சீனாவுக்கு கோபத்தை உண்டு பண்ணும் நடவடிக்கை என்றுதான் பார்க்க வேண்டும்.

இலங்கை;குச் சென்ற சீனாக் கொல்கலன் கப்பலொன்றை இந்தியக் கடற் படையினர் இடை மறித்திருக்கின்றார்கள் என்ற தகவல்களும் வருகின்றன. இதனை கொழும்பு துறைமுகத் தொழிற் சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இந்திய அதிகாரிகள் அந்தக் கப்பலை சீனாவுக்கே திருப்பி அனுப்பவும் முயன்று கொண்டிருக்கின்றார்கள் என்று கூறும் அவர், இந்தக் கப்பல் நமது துறைமுகத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் வந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த மோதல்களுக்கு மத்தியில் சீனா அமெரிக்காவுக்கு மிகக் கடுமையான ஒரு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிக்கின்றது. இதற்குக் காரணம் அமெரிக்காவுக்குள்ளேயே இருந்து 10 வரையிலான ஊடக நிறுவனங்களை சீனா நடாத்திக் கொண்டிருக்கின்றது. இவர்களில் பணி புரிகின்றவர்கள் மீது தற்போது அமெரிக்கா நிருவாகம் கடுமையாக நடந்து கொள்ள முனைக்கின்றது. இது சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி வருகின்றது எமது நடவடிக்கைகள் எல்லாம் சட்ட ரீதியாகத்தான் நடக்கின்றது. நமக்கு மட்டும் என்ன புதிய கட்டுப்பாடு. இந்த நெருக்கடியில் தற்போது 12 பேர் வரையிலான அமெரிக்க இராஜதந்திரிகளை சீனா தனது நாட்டில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது.

அண்மைக் காலத்தில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா வெளி விவகார அமைச்சர் மைக் பம்பியோ சீனா அமெரிக்;காவின் நண்பனா பகைவனா என்ற கோடு வரையப்பட வேண்டிய நேரம் இப்போது வந்திருக்கின்றது என்று கூறி இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

தேர்தல் அரங்கம் அங்கே நிகழ்வது என்ன!

Next Story

அண்மைய தேர்தல் முடிவுகள்