40,000 பேருடன் காணாமல் போன பாகிஸ்தான் நகரம்!

தெற்கு பாகிஸ்தானின் தூசி நிறைந்த தற்போதைய சிந்து சமவெளிப்பகுதிகள், உலகின் மிகவும் சுவாரஸ்யமான  பழமைவாய்ந்த நகரங்களின் எஞ்சியவையாக இருக்கின்றன. இவற்றைப்பற்றி பெரும்பாலான மக்கள் ஒரு போதும் அறிந்திருக்கவில்லை.
பாகிஸ்தான்

என்னை சுற்றியிருக்கும் பண்டைய நகரத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, நிலவிய இதமான வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தென்றல் காற்று வீசியது. லட்சக்கணக்கான செங்கற்களைக் கொண்டு நடைபாதைகளும் கிணறுகளும் கட்டமைக்கப்பட்டிருந்தன. முழு சுற்றுப்புறங்களும் ஒரு கட்டம் போன்ற பாணியில் பரந்து விரிந்துள்ளன.

பழங்கால பௌத்த ஸ்தூபம் காலத்தால் பழுதடைந்த தெருக்களில் உயர்ந்து நிற்கிறது. அத்துடன் பெரிய சமூக குளம், முழுமையான விரிவான படிகளுக்கு கீழே இருந்தது. எனினும், வெகு குறைந்த அளவிலான இதர மக்கள் அங்கே இருந்தனர். தெற்கு பாகிஸ்தானின் லார்கானா எனும் தூசி நிறைந்த நகருக்கு வெளியே ஒரு மணி நேரம் வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மொகெஞ்சதாரோ பகுதியில் நான் இருந்தேன்.

இன்றைக்கு அந்த நகரின் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் முந்தைய கால நகரங்களில் ஒன்றாக இது இருந்தது என்பது மட்டுமின்றி, செழிப்பான பெருநகரில் இடம் பெறக் கூடிய உயர்ந்த நவீன கட்டமைப்புகளை கொண்டிருந்தது.

மொஹஞ்சதாரோ, என்றால் சிந்தி மொழியில் இறந்த மனிதர்களின் குன்று அல்லது மேடு என்று பொருளாகும். உலோகக் காலத்தின் போது வடகிழக்கு ஆப்கானிஸ்தான் முதல் வடமேற்கு இந்தியா வரையிலான ஆட்சிக்கு உட்பட்டிருந்த, ஒரு காலத்தில் செழுமையாக இருந்த சிந்து சமவெளி (ஹரப்பா என்றும் அறியப்படுகிறது) நாகரீகத்தின் பெரிய நகரமாக இருந்தது. ஏறக்குறைய 40,000 குடிமக்கள் இங்கு வசித்ததாக நம்பப்படுகிறது. மொஹஞ்சதாரோ கிமு 2500 முதல் 1700 வரை செழிப்பாக இருந்தது.

“இது ஒரு நகர மையமாக மெசபடோமியா, எகிப்து ஆகியநாடுகளுடன் சமூக, கலாச்சார, பொருளாதாரம் மற்றும் ஆன்மீகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது,” என மொஹஞ்சதாரோவில் பணியாற்றும் மூன்றாம் தலைமுறை குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் வழிகாட்டியான இர்ஷாத் அலி சோலங்கி விவரிக்கிறார்.

ஆனால், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் செழித்தோங்கி வளர்ச்சி பெற்ற பண்டையகால இதர நகரங்களான எகிப்து, மெசபடோமியா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, மொஹஞ்சதாரோ குறித்து சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கி.மு.1700 ஆம் ஆண்டில் இந்த நகரம் கைவிடப்பட்டது. ஏன் இங்கு குடியிருந்த மக்கள் வெளியேறினர் அல்லது அவர்கள் எங்கே சென்றனர் என்பது குறித்து இந்த நாள் வரை யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

பாகிஸ்தான்

இந்தப் பகுதியில் சில செங்கற் கட்டிடங்கள் இருந்ததாக கேள்விப்பட்டு 1911ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தப் பண்டைய நகரத்துக்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்தனர். எனினும், இந்த செங்கற்கள் எந்த வித தொன்மையும் கொண்டவை அல்ல என்று இந்திய தொல்லியல் துறை நிராகரித்தது. இந்த இடம் தொடர்ந்து  பல ஆண்டுகளாகவே அமைதியான இடமாக இருந்து வருகிறது. பின்னர் இந்திய தொல்லியல் துறை அதிகாரியான ஆர்.டி. பானர்ஜி என்பவர், பெளத்தர்கள் வழக்கமாக தியானம் செய்யும் திட்டு போன்ற கட்டமைப்பை, புதைக்கப்பட்ட ஸ்தூபியை பார்த்ததாக நம்பப்படுகிறது.

அவரது இந்த ஆரம்ப கட்ட ஆய்வைத் தொடர்ந்து, மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் தொல்லியலாளர் சர் ஜான் மார்ஷெல் போன்றோர்  அதிக எண்ணிக்கையிலான அகழாய்வு பணிகள் மேற்கொள்வதை நோக்கி இது இட்டுச் சென்றது. இறுதியில் மொஹஞ்சதாரோ, 1980ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பர்ய இடங்களில் ஒன்று என பெயரிடப்பட்டது. எஞ்சியிருந்தவற்றில் கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக  இதற்கு முன்பு வரலாற்றில் காணப்படாத நகரமயமாக்கலின் ஒரு நிலையாக அந்த நகரம் இருந்தது தெரியவந்தது. சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவை  சிறப்பாக பாதுகாக்கபட்ட சிதைவு என யுனேஸ்கோ பாராட்டுகிறது.

சமகால நகரங்களுக்கு அப்பால் இந்த நகரம் மிகவும் ஆச்சர்யகரமான அம்சங்களுடன் கூடிய ஒரு சுகாதார கட்டமைப்பை ஒருவேளை கொண்டிருந்திருக்கலாம். மெசபடோமியா, எகிப்து நகரங்களில் கழிவு நீர் மற்றும் தனிநபர் கழிவறைகள் பணக்காரர்களின்  ஆடம்பரமாகக் காணப்பட்டன.  மொஹஞ்சதாரோவில் மறைக்கப்பட்ட கழிப்பறைகள் மற்றும் மூடப்பட்ட வடிகால்கள் எல்லா இடங்களிலும் இருந்தன.அகழாய்வு பணிகள் தொடங்கியது முதல், 700 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கூடுதலாக 12 மீட்டர் மற்றும் 7 மீட்டர் நீள அகலங்களைக் கொண்ட பொது உபயோகத்துக்கான பெரிய குளிப்பறை மற்றும் தனிநபர் குளிப்பதற்கான அறையும் இருந்தன.  நம்ப முடியாத அளவுக்கு பல தனி வீடுகளில் கழிவறைகள் காணப்பட்டன. நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட அதிநவீன, சுகாதார கட்டமைப்பு மூலம் கழிவுகள் மறைவாக அகற்றப்பட்டன.

“இன்றைக்கு நாம் வாழ விரும்பும் ஒரு நகரத்தின் மட்டத்தில் இது ஒரு சிக்கலானது,” என்கிறார்  புரூக்ளின் பிராட் மையத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் இணைப் பேராசிரியர் உஸ்மா இசட் ரிஸ்வி. இவர்  உடல் மற்றும் கழிவுகளின் வீடு.(The Body, and the Domestication of Waste) என்ற தலைப்பில் மொஹஞ்சதாரோ குறித்த கட்டுரையை 2011ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

தவிர மொஹஞ்சதாரோவில் வசித்த குடிமக்கள் தங்களின் சுற்றுச்சூழலை அறிந்திருந்தனர். இந்த நகரம் சிந்து ஆற்றின் மேற்கு பகுதியில் இருந்ததால், ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வடிகால் முறை, வெள்ளத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தளங்களை திறமையாக உருவாக்கினர்.

மேலும் அவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வரை விரிவாக்கம் பெறும் வகையிலான கடல்வழி கட்டமைப்பின் முக்கிய பங்கெடுப்பாளர்களாக திகழ்ந்தனர். பல நூற்றாண்டுகளாக அவர்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மட்பாண்டங்கள், நகைகள், சிலைகள் மற்றும் வேறு பொருட்களையும் தயாரித்தனர். அவை மெசபடோமியா முதல் இப்போதைய ஓமன் வரை எல்லா இடங்களுக்கும் அனுப்பப்பட்டன.

பாகிஸ்தான்

இன்றைக்கு, இந்த வரலாற்று இடமானது உள்ளூர் பூங்காவாக மாறியிருக்கிறது. நிழலான, பசுமையான தோட்டங்கள், சுற்றுலா மேஜைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. எனினும், பாகிஸ்தானின் இதர பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த தொலைதூர பகுதிக்கு அரிதாகவே சுற்றிப்பாக்க வருகின்றனர். வெளிநாட்டு பயணிகளும் அரிதாகவே வருகின்றனர்.

நான் பழங்கால கட்டம் போன்ற தெருக்களைப் சுற்றி அலைந்தேன், பல கிணறுகளுக்குச் சென்றேன். அதன் உயரமான சுவர்கள் தேவைப்படும் நிகழலையும், மூடப்பட்ட வடிகாலையும் கொண்டிருந்தன.இவை அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டவை என்று வியந்தேன்.

மொஹஞ்சதாரோவாசிகள் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் வெளியேற்றல் கட்டமைப்புகளை அதி நவீன அம்சங்களை கொண்டதாக மட்டுமின்றி, அதில் திறன் பெற்ற மாஸ்டர்களாக தொடக்க கால இதர நாகரீகங்களை சேர்ந்த குடிமக்களுக்கு மாறாக, அமைத்திருந்தனர். இயந்திரங்களின் பற்றாக்குறைக்கு இடையே, நிலையான கட்டுமானப்பொருட்களை உபயோகித்தனர் என்று தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

“அனைத்து செங்கற்களும்  ஒரே வடிவத்தில் இல்லாவிட்டாலும் கூட 4;2;1 என்ற விகிதத்தில் இருந்தன,” என ரிஸ்வி விவரிக்கிறார். “இந்த அனைத்து செங்கற்களும் ஒரு வகையான உணர்திறனை பின்பற்றி இருந்தன என்பதை அங்கீகரிக்க வேண்டியது முக்கியமாகும். தங்கள் நகரம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்ற உணர்வு இருக்கிறது. நீங்கள் எல்லாவற்றையும் ஒரு விகிதத்தில் செய்தால், நீங்கள் நடந்து செல்லும் இடைவெளிகள் கூட, ஒரு விகிதத்தின் ஒரு குறிப்பிட்ட உணர்திறனை இயல்பாகவே பின்பற்றுகின்றன.” என்றார் அவர்.

அதன் கூறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த செங்கற்கள் சூரிய ஒளியில் காயவைத்தும் மற்றும் முடிவாக சூளை தீயில் வேக வைத்தும் உருவாக்கப்பட்டன. மேன்சன்கள், கோயில்கள் போன்ற, ஆடம்பரமான கட்டடங்கள் கட்டப்பட்டபோது, மொஹஞ்சதாரோ வடிவமைப்பின் தொழில்முறையிலான நிலையின் இதர நிலைகள் குறிப்பிடத்தக்க வகையில் விடுபட்டிருந்தன. இதனால் அவை நினைவுச்சின்ன கட்டிடக்கலையை சார்ந்தது அல்ல என்ற பொருள் கொள்ளமுடியாது,” என்று ரிஸ்வி விவரித்தார்.

“இங்கே உள்ள நினைவுச்சின்னம் உண்மையில் உள்கட்டமைப்பின் நினைவுச்சின்னமாக திகழ்கிறது,”என்றார்.

பாகிஸ்தான்

மேற்பகுதி நகரத்தில் இருந்து வெளியே செல்லும் செங்கற்கள் நிறைந்த நடைபாதையை தாண்டினேன். கீழ்பகுதியில் நகரம் இருப்பதை நான் கண்டறிந்தேன். அது 300 ஹெக்டேருக்கும் அதிகமான பெரும்பாலான மொஹஞ்சதாரோ பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. நகரின் செழிப்பான சுற்றுப்புறங்களைக் கொண்டிருந்தது.

அமைப்பு என்பது இங்கு விளையாட்டின் பெயராக இருந்தது. தொடர்புடைய 12 குறுகிய தெருக்கள் 90 டிகிரி கோணத்தில் சரியான திட்டமிடப்பட்ட அமைப்பில் பரந்து விரிந்திருந்தன. குளியல் அறைகள் உள்ளிட்ட, உள்ளூர் வீடுகளின் கதவு வழிகள், எந்த ஒரு வீடுகளிலும் அல்லது கட்டடங்களிலும் இன்றைக்கு காண்பதைப் போல அல்லாமல் நடைமுறைக்கேற்ற நிலைக்கதவுகளைக் கொண்டிருந்தன.

“நீங்கள் ஒரு நிலைக்கதவை பார்க்கும்போது உள்ளேயும் வெளியேயும் இருப்பதன் அர்த்தம் என்ன என்று யாரோ யோசித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்,” என்றார் ரிஸ்வி.

மொஹஞ்சதாரோ அருங் காட்சியகத்தில், வளாகத்தின் ஒரு புல்வெளிப்பகுதியில் ஒரு சிறிய கட்டட அமைப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் குறித்து எனக்கு மேலும் உள்ளார்ந்த பார்வை கிடைத்தது. ஒரே ஒரு விலங்கின் அம்சத்தைக் கொண்ட  நூற்றுக்கணக்கான அலங்கார முத்திரைகள், அதே போல தளத்தில் இருந்து வெற்றிகரமாக தோண்டி எடுக்கப்பட்ட சிலைகள், நகைகள், கருவிகள், பொம்மைகள் மற்றும் மட்பாண்ட துண்டுகள் இருந்தன. கண்ணாடி அலமாரி வரிசைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நினைவுச்சின்னங்கள் குறிப்பிடத்தக்க வகையில் நன்கு பாதுகாக்கப்பட்டன.

கலைப்பொருட்களுக்கு இடையே நகைகள் அணிந்த சிக்கலான சிகை அலங்காரம் கொண்ட இளம் பெண் சிற்பம், உயர் அந்தஸ்து தோற்றம் கொண்ட நன்கு வளர்ந்த ஆணின் இன்னொரு சிற்பம் என இரண்டு சிற்பங்கள் காணப்பட்டன.

“உடல் அலங்காரம் மற்றும் உடல் பராமரிப்பு என்று வரும்போது  இந்த உயர்குடி மனிதர், ஒரு மதகுருவாக அல்லது ஒரு அரசராக இருந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை,” என ரிஸ்வி விவரிக்கிறார். “அங்கு வசித்த குடிமக்கள் தங்களைத் தாங்களே எப்படி கவனித்துக் கொண்டனர் என உள்ளார்ந்த விஷயங்களை இது அளிக்கிறது. கணிதத்தின் மீதான புரிதல் அங்கே இருந்தது தெளிவாகிறது. வடிவவியல் மீதான புரிதல் அங்கே இருந்தது தெளிவாகிறது. ஃபேஷன் பற்றிய புரிதல் அங்கே இருந்தது என்பதும் தெளிவாகிறது,” என்றார்.

பாகிஸ்தான்

எனினும், குடிமக்களின் வாழ்க்கை மற்றும் காலங்களைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு முக்கிய விவரம் தொடர்ந்து அறியப்படாமல் உள்ளது.

பண்டைய எழுத்துகள் பெரும்பாலும் நாகரீகங்களின் ரகசியங்களை சொல்லும் நிலையில்,  மொஹஞ்சதாரோ நிகழ்வில் அவ்வாறு சொல்லப்படவில்லை. சிந்து சமவெளி எழுத்துகள் என்று அறியப்படுவதை அதன் குடிமக்கள் உபயோகித்தனர். “இது படம் அடிப்படையிலான மொழியானதாக இருக்கிறது. இது 400க்கும் மேற்பட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளது. இது இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை,” என்றார் என்னுடைய வழிகாட்டி சோலங்கி.

மொஹஞ்சதாரோவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னொரு தீர்க்கப்படாத மர்மமாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, கிமு 1700 ஆம் ஆண்டில் இந்த நகரம் ஏன் கைவிடப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. இதற்கு காலநிலை மாற்றங்கள் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அப்படியிருப்பினும், மொஹஞ்சதாரோ காணாமல் போனது உடனடியான ஒன்றல்ல என்று ரிஸ்வி விளக்கினார்.

“இந்த நகரமக்கள் தன்னளவில் உடனடியாக வெளியேறி இருக்கமாட்டார்கள். கிமு 1900 ஆம் ஆண்டுகளில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை நீங்கள் பார்க்கலாம். இந்த நகரத்தில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான சில அடையாளங்கள் ,பொருட்கள் பதிவில் வெளிவரத்தொடங்கும். ஒவ்வொருவரும் வெளியேறி விட்டனர்  என்பதாக இருக்காது. ஆனால் பழுதடைந்த நிலையில் சில சுற்றுப்புறங்கள் உள்ளதை நீங்கள் காணலாம். முந்தைய காலத்து மக்கள் தொகை அடர்த்தி காணப்பட்டது போல பிந்தைய காலகட்டங்கள் இருந்திருக்காது. நகரத்தை விட்டு மெதுவாக மக்கள் வெளியேறியதை நீங்கள் பார்க்கலாம்,” என்றார் அவர்.

இப்போது, பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில்  நேரிட்ட தீவிர மழை வெள்ள பேரழிவுக்குப் பின்னர் இந்த நகரம் மீண்டும் ஒரு முறை அபாயத்தில் இருக்கிறது. தொல்லியலாளர்கள் உண்மையில் அச்சப்படுவதை விடவும் குறைவாகவே இந்த பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மொஹஞ்சதாரோ சேதம் அடைந்திருக்கிறது என தொல்லியலாளரும் அருங்காட்சியியலாளருமான அஸ்மா இப்ராஹிம் உறுதிபடுத்துகிறார். இவர் நாடு முழுவதும் பண்டையகால இடங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தான்

மொஹஞ்சதாரோவை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எப்படி முன்னெடுக்கப்பட உள்ளன என்று கேட்டபோது, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கூடுதல் தண்ணீரை கால்வாய்களை உபயோகித்து வெளியேற்ற வேண்டும் என்று இப்ராஹிம் பரிந்துரைக்கிறார். ஆனால், நீண்டகால யுக்தி தேவை என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

ஒரு நீடித்த திட்டம் என்பது, தொல்லியல் இடத்துக்கு பலன் அளிப்பது மட்டுமின்றி, அதன் அருகாமையில் வசிக்கும் சோலங்கியைப் போல பல உள்ளூர் மக்களுக்கும் பயனளிக்கும். சோலங்கியின் தந்த் கிராமத்தில் இருந்து ஸ்தூபி தெளிவாகத் தெரியும். “என்னைப் பொறுத்தவரை, மொஹஞ்சதாரோ பண்டைய நாகரீகத்தின் ஒரு பொக்கிஷம்.

நடைபாதை வழியே நடந்தபோது, சோலங்கியின் கருத்தை ஒப்புக்கொண்டேன். வரிசையான தெருக்கள், சரியாக வெட்டப்பட்ட செங்கற்கள் , பெரிய பொது குளிக்கும் இடம் என்று அறியப்பட்ட தரையில் இருந்த குளம் ஆகியவற்றைப் பற்றி  நான் சிந்தித்தேன் , பரந்து விரிந்த சுகாதார கட்டமைப்பு, இன்றைக்கு பாகிஸ்தானில் காணப்படும் சில உள்கட்டமைப்புகளை விட சிறப்பாக செயல்படும்.

“பொது சொத்து, பொது நலனுக்காக செலவிடப்பட்டிருக்கிறது,” என சோலங்கி நுணுக்கமாக கூறினார்.

குறைந்த பட்சம், அவர்களின் முதலீடு பலனளித்தது. மொஹஞ்சதாரோ செழிப்பாக இருந்தது. தங்களது காலகட்ட முறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட தரத்திலான, வாழ்க்கை தரத்தை அந்த குடிமக்கள் அனுபவிக்க முடிந்தது.

சில மணி நேரங்கள் கழித்து லர்கானாவுக்கு திரும்ப ஒலி எழுப்பும் ஒரு ஆட்டோரிக்ஷாவில் அமர்ந்திருந்தேன்.

என்னால் ஒரு நன்றியுணர்வை உணராமல் இருக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மொஹஞ்சதாரோ மணலிலும், மண்ணிலும் புதைந்திருந்தது.

ஆம், கடந்த நூற்றாண்டின் அர்ப்பணிப்பு கொண்ட சோலங்கியைப் போன்ற வழிகாட்டிகள் மற்றும் தொல்லியலாளர்களின் சோர்வில்லா முயற்சிகளுக்கு நன்றி. பண்டைய உலகின் மிகவும் நவீனமான நகரங்களில் ஒன்றில், மீண்டும் ஒருமுறை நடக்க முடியும். அப்போது சுத்தமாகவும், வடிகால் வரிசைப்படுத்தப்பட்ட தெருக்களையும் நீங்கள் காண்பீர்கள்.

Previous Story

கத்தார் OUT: தோல்விகளால் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதா ?

Next Story

கத்தார் 2022: சிவப்பு அட்டையால் தடுமாறிய வேல்ஸை சூப்பர் கோலால் வீழ்த்திய இரான்