க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள்: இராஜாங்க அமைச்சரின் தகவல்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாகவும், எனினும் பெறுபேறுகளை பெற முடியாதுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

எமது செய்திப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

மேலும், தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறான சூழல் ஏற்பட்டிருக்குமா என்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக சற்றுமுன்னர் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

முதலாம் இணைப்பு

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் தகவல் | Gce Ol Results Released

இந்த நிலையிலேயே தற்போது பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் சுட்டெண்ணை பதிவேற்றும் போதும் முடிவுகள் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ற போதும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானதும் பெறுபேறுகளை https://doenets.lk/ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

இலங்கையில் வெகு விரைவில் களமிறங்கும் முப்படையினர்!  

Next Story

கொழும்பில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை (Video)