எழுதாத பென்சில்கள்!

-நஜீப்-

புதிய அரசியல் யாப்பு சிறுபான்மை இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு. அதுவும் சுதந்திர தினத்துக்கு முன்னர் என்று வேறு செய்திகள். அரசியல் தலைவர்களின் குறிப்பாக ஜனாதிபதி ரணிலின் இந்த கதைகளை எவராவது நம்புகின்றார்களா?

ஆனால் சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்களுக்கு இதில் நிறையவே விசுவாசம் இருப்பதாகத்தான் அவர்கள் கதைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. இதற்கு முன்னர் இவர்கள் எத்தனை முறைதான் இப்படி மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள்.

எந்த நொடியிலும் வீதியில் இறக்கி விடப்படலாம் என்ற நிலையில் இருக்கின்ற ஒரு ஜனாதிபதியிடத்தில் இப்படியும் ஒரு எதிர்பார்ப்பா? இது தனது பதவிக்கான ஆயுளை முடியுமான மட்டும் இந்தியாவையும் தமிழ் தரப்புக்களையும் ஆசைகாட்டி வைத்திருக்கும் ரணில்-ராஜபக்ஸாக்கள் நிகழ்ச்சி நிரல் என்பதனைப் புரிந்து கொள்ள சாம் ஐயா இன்னும் சிலகாலம் பொருத்திக்க வேண்டி இருக்கும்.

அரசின் அசாதாரண வரிகளுக்கு எதிராகவும் பட்டினிக்கு எதிராகவும் மக்கள் வீதிக்கு வரும் போதும், தேர்தல் கதைகள் சூடு பிடிக்கும்வரை இந்தத் தீர்வுக் கதை சந்தையில் இருக்கும்.

அரசியல் யாப்பில் தீர்வு என்பார்கள். தேர்தலுக்குப் பின் என்பர்கள் சுதந்திர தினத்துக்கு முன் என்பர்கள். தீபவளி…புத்தாண்டு என்று கதை ரப்பர் போல போகும். இது எழுதாக பென்சில்கள் என்பதுதான் நமது கணக்கு!

நன்றி:20.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மலேசியா:நாளை நண்பகல் 2 மணிக்கு முன் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளரின் பெயரை சமர்ப்பிக்கவும் – இஸ்தானா நெகாரா

Next Story

செல்போன் ஆபத்துகள்: குழந்தைகளை அமைதிப்படுத்த திறன்பேசிகளை கொடுப்பது சரியா?