உடதலவின்ன – கல்ஹின்ன ஊடக பிரதானிகள் சந்திப்பு!

மலையகத்தின் தமிழகம் என்று இலக்கியவாதிகளினால் சிலாகித்துப் பேசப்படுகின்ற கல்ஹின்னையில் இன்று (21.11.2022) ஊடகப் பிரதானிகளின் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் பிரச்சாரச் செயலாளர் சாபி சிஹாப்தீன் அவர்களும் கல்ஹின்ன G-tv நிறுவனம் மற்றும் குளோபல் பிஸ்னஸ் செண்டர் என்பவற்றின் பணிப்பாளருமான உவைஸ் மொகமட் ரசான் (பிரதேச சபை உறுப்பினர்) அவர்களும் சந்தித்துக் கொண்டனர்.

இரண்டு மணி நேரம் வரை நீடித்த இந்தச் சந்திப்பில் இரு பிரதேசங்களிலுமுள்ள ஊடகத்துறையின் பலம் செல்லவாக்கு  எதிர்வரும் காலங்களில் இரு ஊர்களிலுமுள்ள ஊடகத்துறையினர்களும் இணைந்து செயல்படுவது என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டிருக்கின்றது.

சம்பிரதாய, சமூக ஊடகங்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் இணக்கப்பாடுகள் காணப்பட்டது. மேலும் இளம் தலைமுறையினரை ஊடகத் துறையில் ஊக்குவிப்பது, தேசிய ரீதியில் ஊடகவியலாளர்களுடன் பரஸ்பரம் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.

இன மத உணர்வுகளுக்கு அப்பால் மனிதம் என்ற அடிப்படையில் தேசிய மட்ட ஊடகக் கூட்டணியொன்றை பரந்து பட்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் தோற்றுவிப்பது போன்ற விடயங்களையும் இவர்கள் ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஆராய்ந்ததாக மலையத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்:இர்ஸாட் கமால் Bsc.
Previous Story

இந்தோனீசியா: ஜாவா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி!

Next Story

2023 வரவு செலவுத்திட்டம் 84/121