பாடசாலைக் கல்வியில் நவீன தொழினுட்பத்தின் செல்வாக்கு

-பேகம் றஹ்மான்-

(சிரேஸ்ட விரிவுரையாளர்
தென் கிழக்குப் பல்கலைக்கழகம்)

ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி வளம் என்று வருகின்றபோது அந்நாட்டினுடைய தனிநபர்களினது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் தொடர்பு பட்டவிடயமாக இருப்பதனைக் காணலாம். அந்தவகையில் நாட்டினை சிறப்பான வளமிக்க நாடாக வலுப்படுத்துவதில் மாணவர்களாக கருதப்படுகின்ற சிறுவர்களினது பாடசாலைக் கல்வி என்பது பாரிய செல்வாக்கினை பெற்று விளங்குகின்றது. அவ்வகையில் நாட்டினது அபிவிருத்தியில் கல்;விக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் ஏராளம் என்றே கூற வேண்டும்.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இலவசக் கல்விக் கொள்கையினூடாக அனைவருக்குமான கல்வி செயன்முறையானது நாட்டினது அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்துவதற்கு பங்களிப்பு வகிக்கின்றது. பொதுவாக, இக்கல்வியானது, ஒரு சமூகம் மதித்து போற்றுகின்ற வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் சமூக விழுமியங்கள் சமூக நியமங்கள் போன்ற விடயங்கள் அது மாத்திரமன்றி அன்றாட நடைமுறை செயற்பாடுகள் போன்ற அம்சங்களை இன்றைய தiமுறைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த பயன் படுத்துகின்ற ஓர் தொகுப்பாக இந்தகல்வி முறை காணப்படுகின்றது.

அவ்வாறு நோக்குகின்றபோது ஒரு சமூகத்தின் நிலைத்த வளர்ச்சியிற்கும், ஒரு நாட்டினுடைய நிலைத்த அபிவிருத்தியிலும் கல்வி இன்றியமையாத விடயமாகவே இருக்கின்றது. தவிர, இன்றைய நவீனகாலத்தைப் பொருத்தமட்டில் கல்வியானது மனிதர்களுக்கிடையிலான சமூக இடைவினைகளை ஏற்படுத்துவதிலும் பிரதான பங்கினை பெற்று விளங்குகினற்து. மஹாத்மா காந்தியினுடைய கருத்துப்படி கல்வியானது ‘குழந்தையிடமும் மனிதனிடமும் அவர்களதுஉடல்,உள்ளம் ஆன்மாபோன்றவற்றின் சிறப்புமிக்கபண்புகளைவெளிப்படுத்துவதாகும்’. இக் கருத்துப்படி கல்வி மனிதனுடைய பண்புகளை நெறிப்படுத்துகின்ற விடயமாகவே கருதப்படுகின்றது.

அவ்வகையில் கவ்வி என்பது தனிமனித ஆளுமையில் மாத்திரமன்றி சமூக ஆளுமையிலும் செசல்வாக்கு செலுத்தும் விடயமாக இருக்கின்றமையினால் கல்வியில் தீயசக்திகளின் உள்ளுடல்கள் ஏற்படுத்தப்படுவதிலிருந்தும் பாதுகாப்பு வழங்கப்படுவது அனைத்து பிரஜைகளிற்கும் வழங்கப்பட்ட எழுதப்படாத ஓர் சட்டம் என்றே குறிப்பிட வேண்டும்.

கல்விமுறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய காலமாக எமக்கு இந்நூற்றாண்டை குறிப்பிடலாம். அத்தகைய மாற்றங்களை அனுபவரீதியாக உணர்கின்ற பாக்கியம் எம் அனைவருக்கும் கிடைத்திருப்பதும் பாக்கியமாகவே உணரமுடிகின்றது.

பொதுவாக கல்விய் புரட்சியில் ஏற்படுத்திய இத்தகைய தாக்கமானது அனைத்து நாடுகளிலுதம் செல்வாக்கு செலுத்தியதுடன் அவை மாணவர்களின் கல்வியில் பாரிய பின்னடைவு நிலையிலிருந்தும் பாதுகாத்தது என்றே குறிப்பிடல் வேண்டும். அதாவது, 2019 களின் இறுதிப் பகுதியில் சீனாவில் வூஹான் நகரில் தோற்றம் பெற்ற கொவிட்-19 தொற்றானது மனிதனுடைய அன்றாட வாழ்க்கையினை பாரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

குறிப்பாக 2020 களின் நடுப் பகுதியில் உலகலாவிய ரீதியில் நோய்த் தொற்றுபரவியதன் விளைவாக அனைத்து நாடுகளில் வாழ் பொது மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறையில் பல்வேறுபட்ட திடீர் மாற்றங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய தொரு இக்கட்டாக சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். சமூக மயமாக்கல் செயற்பாடுகள் மற்றும் சமூக இடைவினைகளுக்கு பெரிதும்; அச்சுறுத்தலாக மாறிய காலகட்டமாகும்.

அவ்வாறு நோக்கும் போது, இது நாள் வரை பாடசாலைக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களிடையே காணப்பட்ட நேரடியான தொடர்பில் பாரியளவில் வீழ்ச்சியிற்குற்பட்டு நிகழ்நிலைக் கல்வியில் மாணவர்களை ஈடுபடவைத்தமையானது கல்வித் துறையிற்கேற்பட்ட புரட்சியாகவே கருதக்கூடியதாக அமைகின்றது. பாடசாலைக் கல்வியில் வகுப்பறைகள் நிகழ்நிலைக் கற்கைமுறையினூடாக வீடுகள் பாடசாலைகளாகவும், வகுப்பறைகளாகவும் உருமாற்றம் பெற்றதனை அனுபவரீதியாக அனைவரும் உணர்ந்தனர்.

சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ஒவ்வொரு தனிநபர் வாழ்விலும் அவை செல்வாக்குச் செலுத்தும் என்பதற்கு இந் நூற்றாண்டு ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக கூறலாம். கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்கள் என்கின்ற தொடர்பு நிலையானது ஆசிரியர் பெற்றோர் மாணவர் என்கின்ற முக்கோணதொடர்பாடலுக்கு வித்திட்டமை வரவேற்கத் தக்கது.

ங்கு ஆசிரியர்களின் பங்கிற்கு சமபங்கினை பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் கல்வியில் ஈடுபாடுடையவர்களாக மாற்றப்பட்டனர். இந் நிலையானது ஆசிரியருடைய நடிபங்குகளில் பெற்றோர்களினதும் செயற்பாடுகளுக்குற்படுத்தப்பட்டமையினைகுறிப்பிடலாம். இத்தகைய மாற்றம் பெற்றோர்களுக்கு மேலதிக சுமையாக மாறிய போதிலும் தத்தமது குழந்தைகளின் கல்விச் செயன்முறையில் கண்காணிக்கக் கூடியதாக அமைந்திருந்தமை நல்ல தொருவிடயமாகும்.

அது மாத்திரமன்றி மாணவர்களது தேடல்கள் விஸ்திரமாக்கப்பட்டு அவர்களது புதிய கண்டு பிடிப்புக்களுக்கு இத்தகைய நவீன தொழினுட்பம் உறுதுணையாக அமைந்தது. இத்தகைய கல்விச் சூழலில் ஏற்பட்ட மாற்றமானது நவீன தொழினுட்ப கருவிகளினது பயன்பாடுகள் அதிகரித்ததுடன். மாணவர்கள் தங்களுடைய அறிவுத் தேடல்களில் ஆசிரியர்களை சார்ந்திருப்பதில் இருந்தும் விலகி இணையத்தின் பக்கம் சார்ந்தமையானது அறிவுத்துறைக்கு கிடைத்த உயர்ச்சியாக கருதப்பட்டது. இருப்பினும் உயர்ச்சியில் வீழ்ச்சியாகவே இன்று உருமாறியமை கவலைக்கிடமாக்கிடமான விடயமாகும்.

கல்வியில் தொழினுட்பமானது, மாணவர்களை மாணவப் பண்புகளில் இருந்தும் தூரப்படுத்துகின்றமை கவலைக்கிடமான அம்சமாகும். சிறுவர்கள்தான் மாணவர்கள் என்கின்ற எண்ணக்கருவினை ஐயப்படுத்தும் விடயமாக இன்று மாணவர்களது நடவடிக்கைகள் மாற்றத்திற்குள்ளாகி வருகின்ற நிலையானது எதிர்கால நற்சமூகத்திற்கு வழங்கப்பட்ட சாவு மணியோசையாகவே திகழ்கின்றது. காலத்தின் மாற்றங்கள் மாணவர்களினது ஒழுக்க விழுமியங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் குறிப்பிட்ட சாதனங்கள் கல்வியின் உபகரணங்களாக அன்றி கல்வியில் உபகரணங்களாகவே எண்ணத் தோன்றுகின்றது.

பொதுவாக மாணவர்கள் தங்களுடைய சிந்தனையை தூண்டுவதற்கு பயன்படுத்த வேண்டிய நவீன கல்வி தொடபுர்புச் சாதனங்கள் மாணவர்களது சுய சிந்தனைக்கு முற்றுப் புள்ளி இட்டு செயற்கை சிந்தனைகளுக்கு (Artificial Thinking)  வழி வகுத்தது. மாணவர்களுக்கு கல்வித் துறையில் வழங்கப்பட்டுள்ள இச் சுதந்திரமானது அவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதனை ஒவ்வொரு பெற்றோர்களும் அறிந்திருந்தும் இவற்றை தடுப்பதற்குரிய அணுகுமுறையில் தவறிவிடுகின்றனர்.

இன்றைய இளைய சமுதாயத்தினது தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மானிட சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் குறிப்பாக கல்வியில் தொழினுட்ப சாதனங்களினது சுதந்திரப் பயன்பாடுகள், ஆசிரியர்களால், மாணவர்களது, சிந்தனைகளை தூண்டுவதற்குரிய இயலுமையையும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான வாய்ப்பாகவும் தொழினுட்பத்தினை பயன்படுத்துவதினூடாக வினைத்திறனான மற்றும் விளைத்திறனான கல்வியை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

நன்றி:20.11.2022ஞாயிறு தினக்குரல்

Previous Story

கத்தார்:கால்பந்து தொழிலாளர் மரணங்களை குறைத்துக் காட்டுகிறதா ?

Next Story

காசுக்கு கைதட்டும் கூட்டம்!