“சம்” அழைப்பும் நிராகரிப்பும்!

Sri Lankan Tamil National Alliance (TNA) leader Rajavarothiam Sampathan gestures during a press conference in Colombo on December 30, 2014. Sri Lanka's largest Tamil party has endorsed the main opposition candidate in next week's election, accusing President Mahinda Rajapakse of failing to deliver reconciliation after the country's ethnic war.. AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)
சம்பந்தனின் அழைப்பிலே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்கட்சி தலைவர்கள், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு பொது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழரசு, கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும், நானும் ,சம்பந்தனும் மட்டும் தான் இப்பொழுது இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளோம். இந்நிலையில், சிலர் கால அவகாசம் போதாது என்று அறிவித்திருந்தார்கள்.

எனவே எல்லோருக்கும் பொருத்தமான திகதியை தெரியப்படுத்தி அடுத்த வாரமே மீண்டும்  கூடலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி காலம் காலமாக எடுத்திருக்கும் நிலைப்பாடு சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு அவசியம் என்பதாகும்.

சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தமிழ்க் கட்சிகள் | Tamil Parties Ignore Sampanthan Meeting Request

சமஷ்டி கட்டமைப்பினாலான ஒரு தீர்வு வடக்கு கிழக்குக்கு வழங்க வேண்டும் என்ற பொது நிலைப்பாட்டுடன் இணங்குகின்றவர்கள் எங்களுடன்  சேர்ந்து தங்களது குரல் பதிவையையும் சேர்த்து கொடுப்பது இந்த தருணத்தில் சிறந்ததாகும்.

அடுத்த, கூட்டம் பற்றி தழிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து அனைவருக்கும் பொருத்தமான திகதியிலேயே பொருத்தமான இடத்திலே  சந்திப்பை ஒழுங்குப்படுத்துமாறு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

அழைப்பு

‘சமஷ்டியே தமிழர் அபிலாஷை’ என ஒரு குரலில் பேச வாருங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் விடுத்த அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் கூண்டோடு புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது.

சுமந்திரன் மூலம் சம்பந்தன் விடுத்த அழைப்பின்படி நேற்று மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆக சுமந்திரனும் மாவை சேனாதிராஜா மட்டுமே அங்கு கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தமிழ்க் கட்சிகள் | Tamil Parties Ignore Sampanthan Meeting Request

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட அங்கு சமுகம் தரவில்லை.

கூட்டம் நடைபெறாமல் போனதன் பின்னணி குறித்து சம்பந்தன் முழுமையாக அறிந்துகொண்டார் எனத் தெரியவந்தது.

நேற்று மாலை தம்மைச் சந்தித்த சுமந்திரன் மற்றும் மாவையிடம் சம்பந்தன் கூறுகையில், “கூட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் அதன் தலைவராக நானே விடுத்தேன். என் சார்பில் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் அதனை அனுப்பி வைத்தார்.

யாரும் வரவில்லை

நீங்கள் (மாவை) இந்தச் சமயத்தில் கொழும்பில் நிற்பீர்கள் என்பதால் அப்படி நேரம், திகதியை நானே தீர்மானித்தேன். உங்களுக்கு வசதியான தீர்மானம் தான் இது. ஆனால் கூட்டத்துக்கு யாரும் வரவில்லை.

சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தமிழ்க் கட்சிகள் | Tamil Parties Ignore Sampanthan Meeting Request

என் அழைப்பையும், எனது வீட்டில் சந்திப்பதையும் அவர்கள் விரும்பவில்லைப் போலும். அதுதான் நிலைமை என்றால் நீங்களே (மாவையே) பொறுப்பெடுத்து ஏற்பாடு செய்து அழையுங்கள். திகதி, நேரம், இடத்தைத் தீர்மானியுங்கள். அங்கு நான் வருவேன்” என்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

Previous Story

சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும்.

Next Story

கடந்த கால தவறுகள் ரணிலை  அச்சுறுத்துகிறது?