ரணிலுடன் மூழ்கும் டைடானிக்!

-நஜீப்-

தேயிலை உற்பத்தியாளர்களுடனான ஒரு சந்திப்பில் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்ட ஒரு கருத்து யதார்த்தமான கதையாக அமைந்திருந்தது. தான் மூழ்கிக் கொண்டிருக்கின்ற அதாவது டைடானிக் கப்பலை பொறுப்பேற்றதாக அவர் அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இதிலிருந்து அவர் இரண்டு கருத்தை மக்கள் மயப்படுத்த எண்ணி இருக்கக் கூடும். ஒன்று சாத்தியம் இல்லாத ஒரு பணியை  தனது கைகளில் ஒப்படைத்து விட்டார்கள் என்று அவர் சொல்ல வருகின்றார். அடுத்து கப்பல் எப்படியும் மூழ்கத்தான் போகின்றது என்பது டைடானிக் வரலாறு.

எனவே நான் என்னதான் பண்ணமுடியும் என்று  கைவிரிக்க இப்போதே கதை சொல்லத் துவங்கி இருக்கின்றார். ஒப்படைத்தார்கள் என்பதனை விட அவராகவே தன்னால்  மட்டுமே நாட்டை மீட்க முடியும் என்ற கதைகளை ஊடகங்கள் முன் விளம்பரங்களை செய்துதான் பதவிக்கு வந்தார்.

ராஜபக்ஸாக்களுக்கும்  தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே தெரிவாகத்தான் ரணிலிடத்தில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்கள் என்பதும் தெரிந்ததே. தற்போது கொடுத்த பதவியை திரும்ப பெற்றுக் கொள்ளும் முயற்ச்சியில்தான் இப்போது அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நன்றி– 06.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

எரிபொருள் நெருக்கடி பின்னணியில் ராஜபக்ச புதல்வர்! 

Next Story

'லவ் டுடே'  விமர்சனம்