தென் கொரிய நெரிசலில் மரணமானவர் பற்றிய தகவல்

தென் கொரிய சியோல் நகரில் நடந்த ஹாலோவீன் திரு விழாவில் (இறந்தவர்கள் உயித்தெழும்) நெரிசலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்தினறி மரணமான செய்தியை அந்த நிகழ்வு நடந்த ஓரிரு மணி நேரத்துக்குள்ளே எமது இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தோம்.

அந்த சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு இளைஞனும் உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சியான தகவல் தெரிவிக்கின்றது.

குறித்த இளைஞன் கண்டி-உடதலவின்ன கல்பொக்க என்ற இடத்தைச் சேர்ந்த மொஹம்மட் ஜீனாத். நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணமானவர்.

தனது G-1 வகை கடவுச்சீட்டு  கலாவதியாவதால் அது தொடர்பாக சட்டத்தரணியை சந்திக்கப் போன இடத்தில் இவர் இந்த துயரச் சம்பவத்திற்கு ஆளாகி இருக்கின்றார்.

இதனை தென் கொரியாவில் இருந்து வருகின்ற தகவல்கள் உறுதி செய்கின்றன.

இவர் உடதலவின்ன ஜீ.ஐ. முனவ்வர் என்பரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்களை எதிர்பார்க்கவும்.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் முதல் முறையாக முகக்கவசம் அணியாது விழா நடந்திருக்கின்றது. இறந்த 19 வெளி நாட்டவரில் இலங்கை-உடதலவின்ன இளைஞரும் உள்ளடகுகின்றார். இதுவரை மரணங்கள் 167 காயம் 92. இது மிகப் பிந்திய தகவல்.

தகவல்: அல் பயாட்

Previous Story

சாம்பலும் கானலும்!

Default thumbnail
Next Story