ஊடக கூட்டணி உதயம்

இலங்கையில் முன்னணி ஊடகவியலாளர்களை டசன் கணக்கில் கொண்டிருக்கும் ஒரு கிராமம் கண்டி-உடதலவின்ன. இது கலதெனிய வத்தேகெதர மடிகே என்ற பெரும் நிலப்பரப்புக்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கற்றவர்கள் செறிவாக வாழ்கின்ற இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தங்களது தொழில் மற்றும் தேவைகள் காரணமாக நாட்டில் பல இடங்களில் சிதறி வாழ்வதுடன் இதே காரணங்களுக்காக உலகம் பூராவிலும் பரந்தும் வாழ்ந்து வருகின்றார்கள்.

பிரதேசத்தில் சம்பிரதாய மற்றும் சமூக ஊடகங்கங்களின் ஈடுபாடுள்ளவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்காக உடதலவின்ன ஊடகவியலாளர்களின் கூட்டணி உருவாகப்பட இருக்கின்றது.

இதற்கான அங்குரார்ப்பண வைபவம் வருகின்ற நவம்பர் ஆறாம் திகதி காதி நீதி மன்றக் கட்டிடத் தொகுதி மடிகே – உடதலவின்ன என்ற முகவரியில் அன்றைய தினம் பி.ப 3.30 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான இர்ஷாட் கமால் பீ.எஸ்.சி நமக்குத் தெரிவித்தார்.

இந்த அமர்வு சிரோஸ்ட ஊடகவியலாளர் ஏ.ஆர்.ஏ.பரீல் பீ.ஏ. தலைமையில் நடைபெற இருக்கின்றது. கூட்டத்தை யூ.எல்.எம்.பஷீர் பீ.ஏ. நெறிப்படுத்த இருப்பதுடன் சிறப்புரையை ஹக்கீமிய அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் இதாயத்துல்லாஹ் ரஷீன் நிகழ்த்த இருக்கின்றார். என்றும் இர்ஷாட் கமால் மேலும் தெரிவிக்கின்றார்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுகின்றவர்கள்  0776187928 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Previous Story

ரஷ்யா-இரான் இடையேயான உறவால் ஏற்பட்டுள்ள புதிய அபாயம்

Next Story

ரிஷி சூனக் மனைவி அக்ஷதா மூர்த்தி - கோடீஸ்வரர் மகளின் கடந்தகால வாழ்க்கை