சப்ரி யாரது பிரதிநிதி!

-நஜீப்-

இந்த வாரம் இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பு அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட ராஜபக்ஸாக்களின் விசுவாசியான அலி சப்ரி ஏதாவது நல்ல செய்திகளை நாட்டுக்கு எடுத்து வருவார் என்று சிலர் தப்புக் கணக்குப் போட்டிருந்தார்கள்.!

ஆனால்  இந்த மனித உரிமைகள் அமைப்பில் இருந்த ஓரிரு இஸ்லாமிய நாடுகளுடைய வாக்கையாவது அவருக்கு பெற்றுக் கொடுக்க முடிவில்லை.

பாகிஸ்தான் உஸ்பகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்கைப் பதிவு செய்தது சீனா மற்றும் ரஷ்யாவைத் திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி நிரலினால் அளிக்கபட்ட வாக்குகள்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது இந்த அரசு நடந்து கொண்ட முறையும் அலி சப்ரி என்பவர் முஸ்லிம்களின் தலைவர்-பிரதிநிதி என்பதனை விட ராஜபக்ஸாக்களின் நலன்களைக் காப்பதற்காக பதவிக்கு அமர்த்தப்பட்டவர் என்பதனை அந்த நாடுகள் நன்கு தெரிந்து வைத்திருப்பதும் தான் இந்த வாக்கெடுப்பில் அவர்கள் இலங்கை;கு ஆதரவாக வாக்களிப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

நன்றி:09.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை - பீரிஸ்

Next Story

யூடியூப் பிரபலத்தை பார்க்க..பஞ்சாப் டூ டெல்லி! 250 கிமீ சைக்கிளில் சென்ற சிறுவன்..பெற்றோர் அதிர்ச்சி