ஆசிரியர் தினக் கவிதை

2022

யூசுப் பின் பரகத்

அக்தோபர் ஆறாம் தேதி

அது ஆசிரியர்களுக்கான நாள்.

அந்த வகையில் எனக்கு

யாரெல்லாம் பாடம் கற்றுத்

தந்திருக்கின்றார்கள் என்று

பட்டியல் போட்டுப் பார்த்தால்

முதலில் வந்து நிற்கின்றாள்

எனது அம்மா-தாய்!

பாசத்துடன் பாலூட்டும் போதும்

நேசத்துடன் சோறூட்டும் போதும்

வானம் காட்டி நிலாவைக் காட்டி

பாடிய தாலாட்டுக்கள்

என் கண்முன்னே வருகின்றன.

எனக்கு அம்மா எனும் வார்த்தை

உச்சரிக்க கற்றுக் கொடுத்தவளும்

என் தாய்தானே.

என் பாதங்கள் தரை தட்டி

நான் தத்தித் தத்தி

நடை பயின்ற போது

சரிக்கிடாது என்கரம் பிடித்து

நடை பயிற்றுவித்தவரும்

நல்லது கெட்டது சொல்லித் தந்த

என் அப்பா எனக்குக் குருதானே!

ஆசிரியர் தினக் கவிதையின்

இது என் முன்பாக நினைவுகள்!

 ***

இரண்டாம் பாகத்தில் இப்போது

எனது நேசத்துக்குரிய

பள்ளி ஆசிரியர்கள் பற்றி

சில வரிகளை சொல்ல நினைக்கின்றேன்.

நாலு வயதானதும்

முன்பள்ளி போய் நின்றேன்.

அங்கு என்போன்ற

குஞ்சிகள் டசன் கணக்கில்.!

என் கல்விப் பயணத்தில் ஆரம்பம்

அங்குதான் துவங்கி இருக்க வேண்டும்!

இந்த நாளில் அந்த முன்பள்ளி

ஆசியரியர் முகத்தையும் என்னுள்

நினைவு கூருகின்றேன்.

***

வயது ஐந்தானதும்

அரச பள்ளிப் பிரவேசம்,

காட்சிகளும் கட்டிடங்களும் மாறின.

மணியோசைக்கு இசைவாக

அங்கே நாம் காரியம்

பார்க்கப் பழக்கப்பட்டோம்.

ஆசிரியர்கள் மாற

அப்பியாசங்களும் மாறும்.

 ***

கல்வி வளம் மிக்க எமது மண்ணில்

நல்லாசான்கள் பாடம் கற்றுக் கொடுக்க

எமது எதிர்காலம் இந்த

ஜாமியுள் அஸ்ஹர் தேசிய கல்லூரிதான்

தீர்மானிக்கப் போகின்றது.

மிகுந்த நம்பிக்கையுடன்

எமக்கு பாடம் கற்றுக்

கொடுக்கும் அனைத்து

ஆசிரியர்களுக்கும் இந்த நினைவு நாளில்

நல் வாழ்த்துச் சொல்லி

விடை பெறுகின்றேன்.

-மிக்க நன்றி-

கனிஷ்ட பிரிவு

ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி

கண்டி

Previous Story

31 இலட்சம் குடும்பங்களுக்கு  உதவிகள் வழங்க திட்டம்

Next Story

மெஸ்சி ஒய்வு!