டொலருக்கு வீடு: டுபாயில் இருப்பவர் வாங்கினார்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நடவடிக்கை எடுத்தார். இந்த வீடுகளை டொலரில் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் இன்று கொள்வனவு செய்த வியாட்புர வீட்டுத் தொகுதியில் 02 படுக்கையறைகள் கொண்ட வீட்டின் பெறுமதி 158 இலட்சம் ரூபா. குறித்த வீட்டை டொலர்களில் கொள்வனவு செய்யும் போது 10% தள்ளுபடி வழங்கியதன் அடிப்படையில் 142 இலட்சம் ரூபாவிற்கு குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார். இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கு இதுவரை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் $275,000 இலக்கை அடைய எதிர்பார்க்கிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர் மூலம் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாறான இரண்டு வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பொரளை ஓவல்வியூ திட்டமானது 608 வீட்டு அலகுகளையும் அங்கொட லேக்ரெஸ்ட் திட்டமானது 500 வீட்டு அலகுகளையும் கொண்டுள்ளது.

தற்போது மேலும் 12 நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் தேவை 3,667 வீடுகள் ஆகும். இந்த வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு வசதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வீடுகளை டொலர்கள் மூலம் பெற்றுக்கொள்வதில் முறையான முறையில் வங்கிகள் ஊடாக வெளிநாட்டுப் பணத்தை அனுப்பிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

UK:லெஸ்டரில் இந்து, முஸ்லிம் பிரச்னை தீவிரமடைய போலிச் செய்திகள் காரணமா?

Next Story

ஆக்கிரமித்த இடங்கள்: ரஷ்யாவோடு இணைகுக்ம் புதின்