பாக்:மருமகனுக்கு உதவி கேட்ட பிரதமர் பெரும் குழப்பம்

பாகிஸ்தான் பிரதமர், தன் உறவினருக்கு விதிமுறையை மீறி உதவும்படி அதிகாரிக்கு உத்தரவிடும் ‘ஆடியோ’ வெளியாகி அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ– இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசின் உயர் அதிகாரியிடம் பேசுகிறார். இந்தியாவில் இருந்து மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு, தன் மருமகனான ரஹீல் என்பவருக்கு சில விதிமுறைகளை தளர்த்தி உதவும்படி கூறுகிறார்.

latest tamil newsஅந்த அதிகாரி, ‘விதிமுறையை மீறி இப்படி செய்தால், அமைச்சரவை ஒப்புதலுக்கு செல்லும்போது, உண்மை தெரிந்து விடும். மேலும் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்’ என கூறுகிறார்.
சமூக வலைதளத்தில் இந்த ஆடியோவை ஏராளமானோர் பகிர்ந்து, பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Previous Story

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு; 20 பேர் படுகாயம்

Next Story

ஜி ஜின் பிங் மாயம்.! ஓ இதுதான் காரணம் ?