-நஜீப்-
2012ல் ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா நின்றபோது அவரின் எதிர் வேட்பாளர் மிட் ராம்னி அவரை நையாண்டி செய்து தெருவில் தைலம் விற்பவன் என்று சொல்லி இருந்தார். ஆனால் நாம் இங்கு ஹக்கீமை அப்படி அழைக்க முடியாது.
அண்மையில் மு.கா. தலைவர் அஷ்ரஃப் அவர்களின் 22வது நினைவுப் நாளில் அட்டாளைச்சேனையில் ஹக்கீம் பேசிய வார்த்தைகள் தெருவில் நின்று தைலம் விற்பவன் பணியில்தான் அமைந்திருந்தது.
தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் கூட்டம் நிரம்பி இருக்கும். அங்கு ஒரு தைல வியாபாரி தன்னிடம் உள்ள தைல விளம்பரத்தக்கு பேசும் வார்த்தையில் கவர்ச்சி, நகைச் சுவை கலந்து இருக்கும்.
இமய மலையில் உச்சியில் போய் பிடுங்கிய செடி என்பர்கள், சிங்கத்தின் பல்லை, முள்லைப் பிடுங்கி இதில் கலவையாக தயாரித்த தைலம் என்பார்கள். மக்கள் தைலத்தை வாங்காவிட்டாலும் வியாபாரியின் வார்த்தை கவர்ச்சிக்காகத்தான் அங்கு கதை கேட்க கூட்டமாக இருப்பார்கள்.
வியாபாரி பொய் பேசுகின்றார் என்பது கூடி இருக்கும் கூட்டத்துக்கு நன்றாகத் தெரியும். இது போன்றுதான் ஹக்கீம் கதையும் இருந்தது. பிரிதொரு சர்ந்தர்ப்பத்தில் விரிவான விளக்கத்தை பதியலாம் என்றிருக்கின்றோம்.
நன்றி: 25.09.2022 ஞாயிறு தினக்குரல்