புதிய அமைச்சர்கள் வரவு!

-நஜீப்-

ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசு தனது அமைச்சரவையை விரிவுபடுத்தத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எதிர்பார்த்தது போல சர்வகட்சி அல்லது தேசிய அரசு என்ற பேச்சுக்கு அங்கு இடமில்லை.

இன்னும் சில நாட்களில் 30 அல்லது 40 இராஜங்க அமைச்சர்கள் பதவி ஏற்க இருக்கின்றார்கள். மஹிந்தவும் பசிலும்தான் அந்தப் பட்டியலைப் போடுகின்றார்கள். இதில் மிகப் பெரும்பாலானவர்கள் மொட்டுக் கட்சியினர்.

எதிரணியில் இருக்கின்ற சிலருக்கும் பதவிகள் கிடைக்க இருக்கின்றது என்று தெரிய வருகின்றது. அதுவும் மொட்டுக் கட்சி அங்கிகரிக்கின்றவர்களாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. எதிரணித் தலைவர் சஜித் தனது தரப்பிலோ கூட்டணியிலோ எவரும் இந்த அமைச்சுப் பதவிகளுக்கு ஏமாற மாட்டார்கள் என்று கூறுகின்றார்.

ஆனால் நமக்கு வருகின்ற தகவல்களின்படி மூன்றுக்கும் குறையாத எதிரணிக்காரர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு பேச்சுவார்த்தைகளை முடித்திருக்கின்றார்கள்.

பதவிகளை ஏற்றதும் அதற்கு இவர்கள் புதிய கண்டு பிடிப்புக்களை நியாயமாக நமக்கு முன்வைக்க வருவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

நன்றி: 28.08.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இந்த வார நகைச்சுவை!

Next Story

 பாபர் ஆஸம்: 'வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்'