இலங்கைக்கு IMF உதவி கிடைக்காது

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கைக்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவை என ஜோன் ஹெப்ஹின்ஸ் பல்கலைகழக பேராசிரியர் டெபோரா பிராவுட்டிகம் (Deborah Brautigam) தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி IMF அவசரநிலையின் அடிப்படையில் மட்டுமே உதவியை வழங்கவில்லை என்றும், அதன் பணம் திருப்பிச் செலுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் தேவை என்றும் எனவே இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடும் வரை சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போதைக்கு இலங்கைக்கு உதவி கிடைக்காது; IMF திட்டவட்டம்! | For Now Sri Lanka Will Not Receive Aid Imf Plan

இலங்கை தற்போதைய குழப்பநிலையிலிருந்து மீளவேண்டும் அதன் பின்னரே சர்வதேச நாணயநிதியம் உதவ முன்வரும் என அவர் (Deborah Brautigam) சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலவரம் தொடர்ச்சியாக குழப்பமானதாக காணப்படும்போது சர்வதேச நாணயநிதியம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடியாது எனவும் அவர் (Deborah Brautigam) குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அரசாங்கம் ஸ்திரதன்மை பெறும்வரை அவர்கள் நிதியமைச்சர் ஒருவரை நியமிக்கும்வரை சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எவருமில்லை எனவும் பேராசிரியர் டெபோரா (Deborah Brautigam) குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பணம்திருப்பி கிடைக்காது என கருதவேண்டிய நிலை காணப்பட்டால் சர்வதேச நாணயநிதியம் நிதிஉதவி செய்யாது எனவும் பேராசிரியர் டெபோரா (Deborah Brautigam) இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

சந்திரிகா குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்கவிற்குவாழ்த்து

Next Story

ஊடகங்களில் தலைப்பு செய்தியான சம்பவம் !