ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைப்பற்றுவதற்கு சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பின்னர் நேற்று மாலை டுபாய் இராச்சியம் நோக்கிப் புறப்படுவதற்காக விமானம் மூலம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்குத் திரும்பினார்.
எவ்வாறாயினும், விமான நிலையம் மற்றும் விமானப் பயணிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாட்டை விட்டு விமானம் வழியாக வெளியேறும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வியடைந்தது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதியையும் அவரது பரிவாரங்களையும் கடற்படை ரோந்துக் கப்பலில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து ஜனாதிபதியின் நெருங்கிய இராணுவ உதவியாளர்கள் தற்போது கலந்துரையாடி வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.