ஹீரோவாகும் ஹிருனிகா

-நஜீப்-

படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் மகள் ஹிருனிக்க, தற்போது இலங்கை அரசியலில் வைரலாகி வருகின்றார். அவர் ஒரு சட்டத்தரணியும் கூட. சினிமாப் படங்களில் வரும் ரம்போ பணியில் அவர் தனித்து அதிரடி ஆட்டத்தில் இறங்கி இருக்கின்றார்.

ஜனாதிபதியை வீடு தேடிப் போய் தொடர்ந்து சண்டைக்கு இழுத்து வருகின்றார். அதே போன்று பிரதமரையும் தேடிப் போய் தன்னுடன் மோதவருமாறு அழைத்திருக்கின்றார். பாதுகாப்புப் படைகளுக்கும் இது பெரிய தொல்லையாக மாறி இருக்கின்றது.

அவர் ஜனாதிபதி இருப்பிடப் போய் நுழையும் வரை உளவுத்துறைக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. சில அரசியல்வாதிகளைப் போல் பெரும் தொகை மக்களை புடைசூழ வைத்துக் கொண்டு அவர் இந்த சண்டித்தனத்தை பண்ணவில்லை. தனியாக அல்லது ஒரிவருடன்தான் அவர் ரம்போப் பாணியில் களத்தில் போய்க் குதிக்கின்றார்.

அவருடன் ஒப்பு நோக்கின்ற போது தலைவர் சஜீத் வேஸ்ட் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று சஜித் அணியில் ஹிருனிதான் ஹீரோ. அதே நேரம் அவருக்கு ஆபத்துக்களும் நிறைய இருக்கின்றது என்பதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

 நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல்
Previous Story

தற்காலிக அதிபராகிறார் சபாநாயகர் அபேவர்தனா?

Next Story

அரசாங்க ஊடகங்களை தாக்கும் முயற்சிக்கும்  போராட்டக்காரர்கள்