/

ஜனாதிபதி கோட்டா இத்தாலி வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்!

தற்போதய நெருக்கடியில் இதற்குப் பின்னரும் தனக்கு தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதும் ஜனாதிபதி கோட்டா இத்தாலி வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சொல்ல இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

ஆனால் அவரை அப்படித் தப்பிச் செல்ல அனுமதிக்க முடியாது. அவரிடம் பொது மக்கள் சொத்துக்கள் இருக்கின்றது. அதனைத் தந்து விட்டுத்தான் அவர் போக வேண்டும்.

இன்று கண்டியில் அதிபர்கள் ஆசிரியர்கள் நடாத்திய ‘கோ ஹோம் கேட்டா’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொரகமுவ சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இன்று மாலை கொழும்பில் பௌத்த தேரர்களின் இறுதிப் பிரகடனமும் வெளியாகும் என்று அவர் அங்கு தெரிவித்தார். கண்டியில் அதிபர்கள் ஆசிரியர்கள் நடாத்திய இத்தப் பேரணியில் பல்லாயிரக் கணக்கான வர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கதை உண்மையானால் வருகின்ற 12 திகதிக்குள் இது நடக்கலாம். தான் வெளியேறினாலும் இங்குள்ள தனது உறவுகள் பாதுகாப்பு தொடர்ப்பில் அவர் அச்சம் கொள்வதாகவும் தெரிகின்றது.

நாட்டில் நிருவாகத்துறையில் அரசின் கட்டுப்பாடு முற்றிலும் கைவிட்டுப் போய் இருக்கின்றது.அரச ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக அரச விரோத கருத்துடன் இருக்கின்றார்கள். இதனால் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பவர்களும் மௌனமாக இருந்து தமது தலைகளைக் காத்துக் கொள்ளும் நிலை.

ஒரு கருத்துக் கணிப்பு அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள் வெரும் மூன்று சதவீதம் மட்டுமே என்று அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Story

இராணுவத்திற்குள் பிளவு !

Next Story

ரணிலுக்கு அணுர நெத்தியடி!