ஜனாதிபதிGR தனது நிகழ்ச்சிநிரலையே முன்னெடுக்கின்றார்- வேலு குமார்.MP

அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று, நாட்டின் அரசாங்கம் யாருடையது?, யாருடைய தலைமையில், கட்டுப்பாட்டில் அரசாங்கமும், அரச நிர்வாகமும் செயற்படுகின்றது? என்பன தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

வேலு குமார் 

ஜனாதிபதி ஆசனத்தில் இருந்தபடி தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் முயற்சியில் உள்ளார். பிரதமர் தனது கட்சி சார்ந்த சகாக்களை சேர்த்துக்கொண்டு தனது கட்சியின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதில் உள்ளார்.

இவ்வாறான அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும். இன்று நாட்டில் ஜநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியொன்று இல்லை.

ஆசனத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதி தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றார்: வேலு குமார் | The President Will Advance His Agenda

மக்கள் பிரதிநிதிகள் பெயரளவில் சிலரின் பிடிகளுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்திருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ளார்.

அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட, தனது கட்சியின் சில சகாக்களை முன்னிலைப்படுத்தி தனது வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் ஓரக்கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டுவதற்கே கடந்த வாரத்தில் எதிர்க்கட்சியான நாம் நாடாளுமன்றத்தை பகிஸ்கரிப்பு செய்திருந்தோம். மலையக பிரதேசங்களில் உள்ள பயிரிடப்படாத தோட்ட காணிகள் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம்.

இன்று நாட்டிலே ஏற்பட்டிருக்கும் உணவு பஞ்சத்துடன் மீண்டும் இவ்விடயம் பேசப்படுகின்றது. கடந்த காலம் முழுவதும் தோட்ட காணிகளின் பகிர்வில் தோட்ட மக்களுக்கு பாராபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளது.

எல்லா பகுதிகளிலும் போல வெளியாருக்கே பெருமளவு நிலங்கள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்றைய அரசாங்கத்தில் மலையக பிரதிநிதிகள் எவரும் இல்லை. இருந்த சிலர் சுயாதீனமாகிவிட்டதாக கூறுகின்றனர்.

அரச தலைமைத்துவம் யாருடையதென்பது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு பற்றி பேசுவது நாமே எம்மை காட்டி கொடுப்பது போன்றதாகிவிடும்.

அரசாங்கத்திற்கு எவ்வித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்க முடியவில்லை. மாவட்ட ரீதியில் உள்ள அரசாங்க பிரதிநிதிகள் தங்களது சகாக்களை திருப்திப்படுத்துவதற்கு இதனை பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு தாராளமாக உள்ளது.

கண்டி மாவட்டத்தில் கலபோட தோட்டம், தெல்தோட்டை தோட்டம், போஹில் தோட்டம் மற்றும் கிரேட் வெளி தோட்டங்களிலான பெருவாரியான நிலங்கள் வெளியாருக்கு கொடுக்கும் ஏற்பாடுகளை அரசாங்கம் இப்பொழுதே செய்துள்ளது.

ஆசனத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதி தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றார்: வேலு குமார் | The President Will Advance His Agenda

அதே போன்று வுட்சைட் தோட்டம், கல்தூரியா தோட்டம் போன்றவைகளின் காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் பல முரண்பாட்டு நிலைமை உள்ளது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி, தோட்ட காணிகளை பாதுகாத்து, தோட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவற்றை வழங்க வேண்டும்.

அதை விடுத்து இன்று நிலவும் பலவீனமான அரசியல் சூழலில் தோட்ட காணிகளின் பகிர்வுக்கு முற்படுவது பெரும்பாண்மை அரசியல் பிரதிநிதிகளின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக்கொள்ளவே வாய்ப்பாக அமையும்.

வலியுறுத்தல்

கொழும்பில் இருந்து திட்டங்களை பேசலாம், முடிவுகளை எடுக்கலாம். ஆனால், அவை பிரதேச மட்டத்தில் செயற்பாட்டிற்கு வருகின்ற போது, கட்சி அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பல்வேறு கெடுபிடிகள் உருவாகும்.

அவற்றையெல்லாம் மீறி தோட்ட காணிகளை தோட்ட மக்களுக்கே பயிரிட வழங்கக்கூடிய சூழல் இன்று இல்லை. இன்று தோட்ட மக்களை பாதுகாக்க விசேடமான நிவாரண திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதனையே நாம் வலியுறுத்த வேண்டும். மாறாக பயிரிடாத காணிகளை பேசுவது, நாமே ஆபத்தை தேடிக்கொள்வதாகும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே இதற்கு காரணமாகும்.

ஆசனத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதி தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றார்: வேலு குமார் | The President Will Advance His Agenda

மக்களின் சுமையை குறைப்பதற்கு எந்தவொரு திட்டமும் ஜனாதிபதியிடம் இல்லை. அதேபோல பிரதமர் மற்றும் அமைச்சர்களிடமும் இல்லை. இதுவே மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

'பட்டினி'

Next Story

"கருப்பாடுகளைக் கட்டிப் போடுங்கள்"