3 உலகப் போர் லண்டன் மீது முதல் குண்டு வீசப்படும் – ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான Andrey Gurulyov இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார், ரஷ்ய அரசு நடத்தும் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேட்டோ உறுப்பு நாடான லிதுவேனியா கலினின்கிராட் பகுதியில் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தடுத்ததன் காரணமாக உக்ரைன் போர் உலகளாவிய மோதலாக விரிவடையும் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“முதல் வான் நடவடிக்கையின் போது எதிரியின் விண்வெளி செயற்கைக்கோள்களின் முழு குழுவையும் அழிப்போம். அமெரிக்கர்களா அல்லது பிரித்தானியரா என்பதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள், நாங்கள் அனைவரையும் நேட்டோவாகப் பார்ப்போம்.

‘இரண்டாவதாக, எல்லா இடங்களிலும் 100 சதவிகிதம் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பின் முழு அமைப்பையும் குறைப்போம். மூன்றாவதாக, நாங்கள் நிச்சயமாக வார்சா, பாரிஸ் அல்லது பெர்லினில் இருந்து தொடங்க மாட்டோம். முதலில் தாக்குவது லண்டனைத்தான்.

மூன்றாம் உலகப் போரில் லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும் - ரஷ்யாவின் எச்சரிக்கை

ஐரோப்பாவில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்

உலகிற்கு அச்சுறுத்தல் ஆங்கிலோ-சாக்சன்களிடமிருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மேற்கு ஐரோப்பாவில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

அனைத்து மின் விநியோக தளங்களும் அழிக்கப்படும். மூன்றாவது கட்டத்தில், உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல், குளிரில் தங்கள் போராட்டத்தைத் தொடர மேற்கு ஐரோப்பாவிடம் அமெரிக்கா என்ன சொல்லப் போகிறது என்பதைப் பார்க்கிறேன்.

அமெரிக்கா எப்படி ஒதுங்கி இருப்பார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது கடினமான திட்டம், சில தருணங்களை தொலைக்காட்சியில் விவாதிக்கக் கூடாது என்பதால் வேண்டுமென்றே விட்டுவிடுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருலியோவ் ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தின் முன்னாள் துணைத் தளபதி ஆவார். அவர் சிரியாவில் ரஷ்ய படைகளுடன் பணியாற்றினார். புடினுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப் போரில் லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும் - ரஷ்யாவின் எச்சரிக்கை

Previous Story

முட்டிக் குனியும் இராஜதந்திரக் கதை

Next Story

பிஃபா தரவரிசை பிரேசில் NO-01