மாலத்தீவில் யோகாவுக்குள் புகுந்து தாக்குதல் 

மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.
இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள கலோலு விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கு யோகாவில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்தினர்.
இதில் பலரும் காயமுற்றனர். குறைந்த எண்ணிக்கையில் 10 போலீசார் மட்டுமே இருந்ததால் கலவரத்தை உடனடியாக தடுக்க முடியவில்லை. பின்னர் ராணுவம் வரவழைக்கப்பட்டது.
latest tamil news
இந்த நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி முனு மஹாவர், மாலத்தீவு இளைஞர் நலத் துறை அமைச்சர் அகமது மகலூப், இந்திய கலாச்சார அமைப்பின் நிர்வாகி தன்சீர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் , கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எனவும் அங்குள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Previous Story

சர்வதேசம் எம்மை நம்பத் தயாராக இல்லை, உறவையும் முறிக்கும் நிலை!

Next Story

எத்தியோப்பியா  தாக்குதலில் 230 பேர் பலி