கோமாவுக்குப் போன கோஷங்கள்!

-நஜீப்-

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் துடிப்புடன் முன்னெடுக்கபட்ட வேண்டிய இந்த நாட்களில் தலைமைகள் அது பற்றி இப்போது எதுவுமே பேசுவதில்லை. புலம்பேர் தரப்புக்களும் மௌனம்.

நாடு இந்தியாவில் தங்கி இருக்கின்றது. இந்த நாட்களில் எரிகின்ற வீட்டில் எண்ணையை ஊற்றிவிடுங்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் இந்தியாவிடம் அழுத்தங்கள் பற்றி வியூகங்களை யோசிக்கலாம்.

குறைந்தது நில ஆக்கிரமிப்பைத் தடுக்க கண்டிப்பான கட்டளைகளைக் கொடுக்கப் பண்ணலாம்.? கொடுத்த பில்லியன் டொலர் பணத்தில் ஆயிரம் கோடிகளை மாகாண சபைத் தேர்தலுக்கு என்று  இந்தியாவைப் யோசிக்கப் பண்ணி இருக்கலாம். (பேரின ஆதரவும் கிடைக்கும்) ஈழத் தமிழர் விவகாரத்தில் மோடிக்கு பெரிதாக அக்கரை இல்லை என்பது நமது கணக்கு. இதனால் அழுத்தங்கள் அவசியம்.

அதே போன்று ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் என்ற கோஷமும் இன்று கோமாவில். இந்த ஆட்சியாளர்கள் இதற்கு நீதி தரமாட்டார்கள். இதன் பின்னணியில் பெரும் சதி என்று தாக்குதல் நடந்த நாட்களில் நாம் சொன்னது இன்று நிஜமாகி விட்டது. இந்த இரு பிரச்சினைகளும் இன்று கோமாவுக்கும் போன கோஷங்களாகி விட்டன. தேர்தல் என்றால்தான் இதில் நெழிவுகள் வரக் கூடும்.!

நன்றி:19.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபர்

Next Story

காட்டுத் தீ-01