கோட்டா:உதயங்க சொல்வது என்ன!

நஜீப்

மஹிந்த ராஜபக்ஸ தாயின் (தந்தினா சமரசிங்ஹ திசாநாயக்க) இளைய சகோதரியின் மகனும்  அரசியல் இராஜதந்திரியுமான உதயங்கன வீரதுங்ஹ ரணில் நமது கையாள். எங்களது தேவைக்காத்தான் நாம் அவரை அதிகாரத்தில் வைத்திருக்கின்றோம்.

முடிந்ததும் ஆளைத் தூக்கி வீசுவோம் என்று பகிரங்கமாக சொல்லி இருந்தார். ராஜபக்ஸ குடும்ப அரசியல் பற்றிப் பேசும் போது இந்த உதங்க வீரத்துங்ஹ பற்றியும் கட்டாயம் சில தகவல்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

மிக் விமான ஊழல் விவகாரத்திலும் இவர் பெயர் உச்சரிக்கப்படுகின்றது. உண்மையிலே ஜனாதிபதி கோட்டாவை அவர் பகிரங்கமாகமாகத் தற்போது விமர்சித்து வருகின்றார். அண்மையில் அவர் கடுமையாக ஜனாதிபதி கோட்டாவை விமர்சனம் செய்திருந்த  கதைகள் ஆச்சர்யமானவையாக இருந்தன.

ஊடகவியலாளர் சமுதிதவுடன் நடந்த  அந்தப் போட்டி பின்னர் பதிவிலிருந்து நீக்கப்பட்டிருந்ததை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இன்று  தனக்கு உயிராபத்து இருக்கின்றது. வெள்ளை வேனில் நான்  தூக்கப்படலாம். அதனால் எனது பாதுகாப்புக்கு நான் சில ஒழுங்குகளைச் செய்திருக்கின்றேன்.

தூதுவராலயங்களுக்கும் இது பற்றி தகவல்களைக் கொடுத்திருக்கின்றேன். குறிப்பாக ரஷ்யா அரசுக்கு எனது ஆபத்துக்கள் பற்றி சொல்லி இருக்கின்றேன் என்று சொல்லும் உதயங்க,

கோட்டாவை பலர் புதின் என்றார்கள். நான் துவக்கத்தில் இருந்தே இவர் ஒரு புதின் அல்ல ‘கடின்’ சாதிக்கமட்டார் என்று சொல்லி இருந்தேன். அலை அவர் பக்கம் வீசியதால் நான் மௌனமாக இருந்தேன்.

இன்று ரஷ்யா விமானத்துக்கு எதிராக மேற்கொண்ட தீர்மனங்கள் என்னைப் பலிவாங்க எடுத்த தீர்மானமாகவும் இருக்கலாம் என்றும் அவர் அரசை சாடுகின்றார்.

அமெரிக்கா எப்போதாவது நமக்குப் பொருளாதார ரீதியில் உதவி இருக்கின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். கோட்டாவுக்கு அரசியல் பற்றியோ இராஜதந்திரம் பற்றியோ எதுவுமே தெரியாது என்பது உதயங்க கருத்து.

இவர் கடந்த 30 வருடங்களாக ரஷ்யா-உக்ரைன் நெருக்க உறவில் இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாகப் பார்க்கும் போது ஜனாதிபதி கோட்டா விவகாரத்தில் மெதமூலன குடும்பம் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத அல்லது புலி வாலைப் பிடித்த நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றது. நாட்டை மட்டுமல்ல ராஜபக்ஸாக்கள் குடும்பத்துக்கே கோட்டா ஆப்பு வைத்துக் கொண்டிருக்கின்றார்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கோட்டா:நிறைவேற்று அதிகாரி அல்ல- ரணில் 

Next Story

இந்தியாவில் மதக் கலவரம்; பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகள் இடிப்பு