21 ஐ தடுத்த  கோட்டா!

கடந்த வாரம் 6ஆம் திகதியன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் முன்வைக்கப்படாமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அவரது சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த ஜூன் 4ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் தொடர்பை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்ச, 21வது திருத்தத்தை ஜூன் 6ஆம் திகதியன்று நடைபெறவுள்ள அமைச்சரவையில் முன்வைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

பசிலுடன் பேசிக்கொண்டே 21வது திருத்த முன்வைப்பை இடைநிறுத்திய கோட்டாபய! கசியும் தகவல்கள்!

அதற்கு பதிலாக கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, புதுப்பிக்கப்பட்ட 21வது திருத்த வரைவின் பிரதிகளை ஜூன் 6ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அமைச்சர்களுக்கு விநியோகிக்குமாறு கோட்டாபய, விஜயதாசவிடம் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் ஜூன் 13ஆம் திகதியன்று அமைச்சரவையில் 21ஐ முன்வைக்குமாறு கோட்டாபய கேட்டுக்கொண்டார். அதற்கு விஜயதாசவும் உடன்பட்டார்.

பசிலுடன் பேசிக்கொண்டே 21வது திருத்த முன்வைப்பை இடைநிறுத்திய கோட்டாபய! கசியும் தகவல்கள்!

பசில் ராஜபக்சவின் விலகல் அறிவிப்பு

இதனையடுத்தே பசில் ராஜபக்சவின் பதவி விலகல் அறிவிப்பும் வெளியிடப்பட்டது,

ஒருவேளை 21க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால், இரட்டைக்குடியுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்ச, பதவி விலக நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதை தவிர்க்கும் முகமாக இந்த முடிவை கோட்டாபய எடுத்ததாக நம்பப்படுகிறது.

ஏற்கனவே மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து தாமே விலகச் சொன்னதைப் போன்று பசிலுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த முடிவை கோட்டாபய எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பசிலுடன் பேசிக்கொண்டே 21வது திருத்த முன்வைப்பை இடைநிறுத்திய கோட்டாபய! கசியும் தகவல்கள்!

நகல்கள் விநியோகிப்பு

இதனடிப்படையில், ஜூன் 6ஆம் திகதியன்று அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், அமைச்சர்களுக்கு 21இன் நகல்கள் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை 21க்கு ஜனாதிபதி ஆதரவாக இருக்கிறார் என்று பிரதமர் ரணில் உட்பட்டவர்கள் கூறுகின்றபோதும், ப்லும்பேர்க் செய்தி சேவையின் ஊடான செவ்வியின்போது, துண்டுதுண்டான அரசியல் திருத்தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பசிலுடன் பேசிக்கொண்டே 21வது திருத்த முன்வைப்பை இடைநிறுத்திய கோட்டாபய! கசியும் தகவல்கள்!

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும் அல்லது ஜனாதிபதி முறையை ஒழித்து வெஸ்ட்மின்ஸ்டர் முறைக்கு செல்லவேண்டும் என்று கோட்டாபய அந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே 21க்கு அவர் ஆதரவாக இருக்கிறார் என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மேற்கத்தைய தூதுவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Story

டலஸ்  தலைமையில் புதிய கட்சி

Next Story

சட்டம் ஒழுங்கு கப்பம்!