உலகம் பூராவும் பிச்சை!

நஜீப்

சமகாலத்தில் உலகம்பூராவும் உணவுக்காக பிச்சை கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு இலங்கை என்ற நிலை. இந்தியா தமக்குத் தொடர்ந்தும் சாப்பாடு போடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.

நாமுடன் நல்லுறவில் இருந்த சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இருந்த நல்லுறவு தற்போது கெட்டுப் போய் இருக்கின்றது. இது சீராக இன்னும் சில காலம் செல்லும் என்று நாட்டை மீட்டுத் தருகின்றேன் என்று பதவிக்கு வந்த பிரதமர் ரணில் கூறுகின்றார்.

அத்துடன் வருகின்ற இரண்டு மூன்று வராரங்கள் நாட்டில் பெரும் நெருக்கடி நிலைக்கு இடமிருக்கின்றது என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். அப்படியானால் அதற்குப் பிந்திய நாட்களில் நாட்டு நிலை சீராகி விடுமா என்றும் நாம் அவரிடம் கேள்வி எழுப்புகின்றோம்.

இதனை பிரதமர் ரணில் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டுதான் மக்களுக்குக் கூற வேண்டுமா? நாமும் இன்னும் பலரும் இப்படி ஒரு நிலை வர இருக்கின்றது என்ற கடந்த ஒருவருட காலத்துக்கு முன்பிருந்தே கூறி வருகின்றோம். இதன் மூலம் தான் கையாளாகாத ஒரு பிரதமர் என்பதனை ரணில் உறுதி செய்கின்றார்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு: மோடி வாய் திறக்காதது ஏன்?

Next Story

டலஸ்  தலைமையில் புதிய கட்சி