தன்னை தானே திருமணம்:  குஜராத் பெண்!

-ஷியாம் சுந்தர்-

குஜராத்தில் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அவரின் இந்த முடிவை தொடர்ந்து ஸோலோகாமி (sologamy) என்ற வார்த்தை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது… அது என்ன ஸோலோகாமி.. வாங்க பார்க்கலாம்!

உலகம் முழுக்க பாலியல் தேர்விலும், பாலியல் ரீதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. பெண், ஆண், திருநங்கை, திருநம்பி போன்ற பால் பிரிவுகள் தொடங்கி.. LGBTQ++ போன்ற பாலியல் தேர்வுகளிலும் பரந்துபட்ட பிரிவுகள் தோன்றி உள்ளன.

இதை சமுதாயத்தில் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவரின் தனிப்பட்ட பாலியல் விருப்பம், தேர்வு எல்லாம் அவர்களின் தனிப்பட்ட முடிவை சார்ந்தது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது.

 LGBTQ+

LGBTQ+

இந்தியாவிலும் LGBTQ++ பிரிவு திருமணங்கள், உறவுகளுக்கு உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. சமீபத்தில் கூட கேரளாவில் பெற்றோரால் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியது.

அதோடு LGBTQ++ பிரிவினரை போலீசார் துன்புறுத்த கூடாது. அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கூட வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

சுயதிருமணம்

சுயதிருமணம்

இப்படி இந்தியாவிலும்.. உலகத்திலும் பாலியல் ரீதியாகவும், பால் ரீதியாகவும் பரந்துபட்ட சிந்தனைகள் ஏற்பட தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் குஜராத்தில் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள்.. பெண் ஒருவரை தன்னை தானே திருமணம் செய்து கொண்டு, தன்னுடனே ஹனிமூன் செல்ல முடிவு செய்துள்ளார்.

 பிந்து

பிந்து

குஜராத்தை சேர்ந்த 24 வயது க்சமா பிந்து என்ற பெண்தான் தன்னை தானே ஜூன் 11ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். எனக்கு கல்யாணம் செய்வதில் விருப்பம் இல்லை..

ஆனால் மணப்பெண்ணாக இருக்க விருப்பம். அதனால் என்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன். நான் கோவாவிற்கு திருமணம் முடிந்து ஹனிமூன் செல்ல இருக்கிறேன். நாட்டில் நான் இதன் மூலம் ஒரு எடுத்துக்காட்டாக ஆக விரும்புகிறேன் என்பதால் இப்படி செய்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

ஸோலோகாமி

குஜராத்தில் வதோதராவில் அந்த பெண்ணின் சுய திருமணம் நடக்க உள்ளது. இந்து முறைப்படி இந்த சுய திருமணத்தை அந்த பெண் நடத்த உள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் சுய திருமண அறிவிப்பால் இணையம் முழுக்க ஸோலோகாமி என்ற வார்த்தை பிரபலமாகி வருகிறது. ஸோலோகாமி என்பது ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் முறையாகும்.

அது என்ன ஸோலோகாமி?

உலகம் முழுக்க பல நாடுகளில் இப்போது ஸோலோகாமி முறை அதிகரித்து வருகிறது. ஸோலோகாமி போலவே இன்னும் பல திருமண, உறவு முறைகள் உள்ளன. அது என்னென்னெ என்று பார்க்கலாம். பைகாமி – இரண்டு பேரை திருமணம் செய்வது. எண்டோகாமி – ஒரு இனக்குழுவிற்குள், ஜாதிக்குள் மாறி மாறி திருமணம் செய்வது. சமயங்களில் ஒரே குடும்பத்திற்குள் செய்வது

திருமண – உறவு வகைகள்

எக்சோகாமி-ஒரு இனக்குழுவை விடுத்து வேண்டுமென்றே வெளி குழுவில் திருமணம் செய்வது. அதாவது ஒரு இனக்குழுவை விடுத்து வெளியே திட்டமிட்டு திருமணம் செய்வது.

மோனோகாமி – ஒரே நபரை திருமணம் செய்வது.

பாலி காமி-பல பேரை திருமணம் செய்வது, அல்லது பலருடன் திருமணம் உறவில் இருப்பது. உலகம் முழுக்க இந்த வகை இப்போது அதிகரித்து வருகிறது.

Previous Story

துமிந்த சில்வா சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் !

Next Story

ஓய்விலிருந்து திரும்புகிறார் மொயின் அலி?