விமல் – சஷி : ஒரே நாளில் வழக்கு விசாரணை

விமல் மீதான வழக்கு

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஹுசைனின் இலங்கை வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறுபேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விமல் - சஷி இருவருக்கும் ஒரே நாளில் வழக்கு விசாரணை

சஷி வீரவங்ச மீதான வழக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி கடந்த 27ஆம் திகதி மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மேன்முறையீடு கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

விமல் - சஷி இருவருக்கும் ஒரே நாளில் வழக்கு விசாரணை

இந்த நிலையில் வீரவன்சவின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, இன்றைய தினம் குறித்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

Previous Story

உலக சாதனை புத்தகத்தில் இலங்கை-மருதமுனை சிறுமி

Next Story

சிறுமியை  கர்ப்பமாக்கிய ஐயர்!