உயிர்காத்த நாய்க்கு தேசிய விருதா சர்வதேச விருதா?

அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை, அந்தப் பகுதியில் இருந்த நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

நேற்று காலை அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையை பாடசாலை மாணவர் கடக்க முயன்ற போது பொல்கஹவெலவில் இருந்து வந்த ரயில் குறுக்கு வீதியை அண்மித்துள்ளது.

இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் – மாணவனை காப்பாற்றிய நாய்

இதன் போது மாணவன் ரயிலில் மோதப்போகிறார் என அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்ட போதிலும் ரயில் சத்தம் காரணமாக அவருக்கு கேட்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த தெரு நாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடிவந்து மாணவன் மீது பாய்ந்துள்ளது. இதன் போது நிலைமையை உணர்ந்த மாணவன் ரயில் கடவையை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

இலங்கையில் திரைப்படத்தை மிஞ்சிய நிஜ சம்பவம் – மாணவனை காப்பாற்றிய நாய்

ஒரு நொடி தாமதமாகியிருந்தால் இளைஞனும் நாயும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருப்பார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் குறித்த மாணவனுக்கு எரிபொருள் பிரச்சினையால் வாகனம் ஒன்று கிடைக்காமையினால் ரயில் வீதியில் பயணித்து பரீட்சை மண்டபத்தை சென்றடைய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

Previous Story

இலங்கையை கைவிட்ட உலக வங்கி

Next Story

 ரிஷாத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் நீக்கம்