WM மென்டிஸ் நிறுவனத்தின் அட்டகாசம்

நாடு பொருளாதார நெருக்கடிக்குச் செல்லும் வரை தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

2018-2019 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கோப் குழு இன்று (25) கூடியது.

இதன்போதே, இவ்வாறு தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், வரையறுக்கப்பட்ட டப்ளியு.எம்.மெண்டிஸ் நிறுவனம் ஒரே சொத்தினை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் அடமானம் வைத்துள்ளதா? என்பது குறித்து கோப் குழு ஆராய்ந்து வருகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக அதிகளவு செலுத்தப்படாத கடன் நிலுவைகளைக் கொண்ட சில நிறுவனங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ​​டபிள்யூ.எம்.மென்டிஸ் லிமிடெட் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் ஒரே மாதிரியான சொத்துக்களை அடகு வைத்து கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கை வங்கி அதிகாரிகளும், மக்கள் வங்கி அதிகாரிகளும் சந்தித்துக் கொண்ட போது, ​​அந்த நிறுவனம் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிறுவனம் இந்த சொத்தை சுமார் 7 பில்லியன் ரூபாவுக்கு அடமானம் வைத்து கடனாக பெற்றுள்ளது.

கோப் குழு உறுப்பினர்களின் கூற்றுப்படி, சம்பவம் குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Previous Story

டொலர் : ஹஜ் பயணத்திற்கும் சிக்கல் 

Next Story

ரஹ்மானின் இசை அவதாரம்: ‘மாயவா, தூயவா...’!