ராஜபக்சர்கள் மத்தியில் கடும்  பிளவு! 

ராஜபக்சர்கள் மத்தியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளமையை அண்மைக்கால சம்பவங்கள் நிரூபித்து வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் ரமேஸ் பத்திரன, வெளியிட்ட தகவல்கள், இந்த பிளவை மேலும் விரிவடையச்செய்யலாம் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பத்திரனவின் கூற்றுப்படி காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதை, கோட்டாபய ராஜபக்ச விரும்பவில்லை. அவர் தடுக்கவே உத்தரவிட்டிருந்தார். எனினும் அவரின் உத்தரவை பொலிஸ் அதிகாரி தென்னக்கோன் நடைமுறைப்படுத்தவில்லை.

இது, மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச என்ற அதிகார மையங்கள் இலங்கையில் செயற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மகிந்த ராஜபக்சவின் பிரியாவிடை நிகழ்வின்போது, கோபமூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதையும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டிருந்தார்

இந்தநிலையில் நாடாளுமன்றில் உரையாற்றிய, மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச, மகிந்த இரண்டாம் தவணை ஜனாதிபதி பதவி முடிவடைந்தநிலையில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

அதேநேரம் பசில் ராஜபக்ச, கோட்டாபயவுக்கு எதிராக செயற்படுவதாகவும் நாமலை அவர் தமது கைக்குள் வைத்துள்ளதாகவும் நாடாளுமன்றில் எதிர்கட்சியினர்  சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்மூலம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் நிலையில் இருந்து நீக்குவதற்கு பசில் திட்டமிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Story

எனது சொத்துக்கள் வியர்வை சிந்தி சம்பாதித்தவை - ஞானாக்கா

Next Story

என்னை மன்னித்து விடுங்கள்..!  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்