ஆர்ப்பாட்டம் செய்தால் எரிபொருள்  இல்லை!       மக்கள்  பெட்டிப் பாம்பாக  இருக்கவும்  அமைச்சர்!!

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களால் பல சந்தர்ப்பங்களில் மோதல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சனிக்கிழமையும் எரிபொருள் விநியோகம் வேண்டி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களை பெட்டிப் பாம்பாக  இருக்கவும்  என்றுதான் அமைச்சர் சொல்ல வருகின்றார். என்ன இது நடக்கின்ற காரியமா? மொன்டசூரிக் குழந்தைகளே டீச்சரை கேள்வி கேட்கும் காலம் இது, அமைச்சர் கதை ஒரு நகைச்சுவை மட்டுமாகத்தான் இருக்கும்.

Previous Story

அமைச்சர் வெளியிட்ட தகவல்! நம்பலாமா!!

Next Story

இது ஐயா மல்லி சண்டை!