சாபத்தில் பங்கு பிரித்தல்!

-நஜீப்-

ஒரு மனிதனுடைய இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் பங்கு கொள்வது அவனது உறவுகள் நெருக்கமான நண்பர்கள் என்பது பொது விதி. அதுபோல இப்போது ராஜபக்ஸாக்களின் நெருங்கிய நண்பரும் உறவுக்காரருமான ரணில் அவர்களுக்கு உதவுகின்ற நோக்கில்தான் பிரதமர் பதவியேற்றிருக்கின்றார்.

அவருக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் உள்ள அரசியல் உறவுகளை நாம் பல இடங்களில் பேசி இருக்கின்றோம். அது பற்றி மேலும் பேச வேண்டியதில்லை. இப்போது அவர்களது குடும்ப உறவு முறை என்ன என்று பார்ப்போம்.

ரணில் சிராந்திக்கு சகோதரன் முறை என்பதால் மஹிந்த ரணிலுக்கு மச்சான் முறை இதனை ரணில் சகோதரர் ஷான் விக்கிரமதுங்கவும் உதயங்க வீரத்துங்கவும் உறுதி செய்கின்றார்.

எனவே நாடே ராஜபக்ஸாக்களைத் திட்டிக் கொண்டிருக்க அதில் பங்கேற்க ரணில் வந்திருப்பதுடன் அடுத்தவர்களுக்கும் அதனைப் பகிரும் முயற்ச்சிகள்தான் தற்போது நடக்கின்றது. புரிகிறதா கதை.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 22.05.22

 

Previous Story

மகிந்த ராஜபக்சேவை மக்கள் அடித்து கொல்லட்டும்!

Next Story

அழவும் முடியாத, குளிக்கவும் முடியாத பெண் !காரணம்