கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் 24 பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட 24 பேரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதாகவுள்ள் 24 பேரில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஆகியோரும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.





