மத்திய வங்கிக் கொள்ளையன் பிரதமரா- ரில்வின்

மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர் ரணில் என ஜனாதிபதி தரப்பு குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் அப்படியான ஒருவரை எந்த அடிப்படையில் பிரதமராக்க முடியும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியை கொள்ளையடித்தார் என்றுதான் ஜனாதிபதி தேர்தலின்போது பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படியான ஒருவரை ஜனாதிபதி நம்புவது எந்த அடிப்படையில்? எனவே , ராஜபக்சக்கள் ரணில் ஊடாக தமது பலத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

எனவே, மக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி விலகியே ஆகவேண்டும் என வலியுறுத்திய அவர், அதுதான் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு என்றும் குறிப்பிட்டார்.

 

Previous Story

ரணில் பிரதமர்: மஹிந்த உத்தரவு கோட்டா நிறைவேற்றுகிறார்!

Next Story

ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவி! எத்தனை நாள் கதிரையில் இருப்பார்?