எளிமையாக இடம்பெற்ற ஏ ஆர் ரஹுமான் வீட்டு திருமணம்!

பிரபலங்கள் இல்லாது இசைப்புயல் ஏ ஆர் ரஹுமான் மகள் திருமணம் மிக மிக எளிமையாக இடம்பெற்றுள்ளது.

இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதிஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம்  நேற்று முன் தினம் மாலை மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக இந்த திருமணம் நடந்தது.

இந்நிலையில் மகளின் திருமணம் போட்டோவை பதிவிட்டுள்ளார் ரஹ்மான். அந்த புகைப்படத்தில் மணமக்களுடன் ரஹ்மான், அவரது மனைவி சாய்ராபானு, இளைய மகள் ரஹீமா, மகன் அமீன் ஆகியோர் உள்ளார்கள். இது குறித்து ரஹ்மான் கூறுகையில்,

‛‛மணமக்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிப்பாராக. உங்கள் அனைவரின் வாழ்த்தையும் முன்னரே நன்றியை உரிதாக்கி கொள்கிறேன்” என்றார்.

அதேவேளை கதீஜா தனது பதிவில், “இதுதான் என் வாழ்வில் நான் எதிர்பார்த்து காத்திருந்த நாள். என்னவரை கரம் பிடித்தேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சினிமா துறையினர் மற்றும், ரஹ்மானின் ரசிகர்களும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous Story

நான் நிறைவேற்று அதிகாரமுள்ளவன் என்னை ஐந்து வருடங்களுக்கு அசைக்கு முடியாது நான் போகவும் மாட்டேன்!

Next Story

ஓடும் சப்ரி! அடுத்தவரை தேடும் GO?