யார் சொல்வது நிஜம்!

-நஜீப்-

உப சபாநாயகர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்று நாம் தேடிப் பார்த்த போது 05.05.2022 காலை பத்து மணிவரை எதிரணி சார்பில் சு.கட்சி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தான் வேட்பாளர் என்றிருந்தது.

ஆனால் சஜித் அணியினர் தமக்குத் தெரியாது பாக்கர் மாக்காரின் பெயரை முன் மொழிந்ததால்தான் நாம் எமது வேட்பாளரை ஆளும் தரப்பு வேட்பாளராக கொடுத்து அவரது வெற்றிக்கு வாக்களிக்க வேண்டி வந்தது என்று விமல் வீரவன்ச கதை விடுகின்றார். ஆனால் அவரோ வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவுமில்லை.

அதே நேரம் அவரது சகா, முஸம்மில் சஜித் தாயார் ஹேமா பிரேமதாச இரகசியமாக திரு. நடேஷன் ஊடாக ராஜபக்ஸாக்களுடன் உறவு கொண்டு டீல் அரசியல் செய்ததால் நாமும் அவர்க்கு அதே பாணியில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டி வந்தது என்று கூறுகின்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் சஜித், முஸம்மில் கூற்றை மறுத்திருந்தார்.

நன்றி: 08.05.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அம்பாறை: பாலமுனை துப்பாக்கிச் சூடு  16 பேருக்கு கதி!

Next Story

தங்கை மகளின் கொண்டாட்டத்திற்கு அமைச்சின் நிதியை செலவிட்ட வீரவன்ச