நிதியும் நீதியும் சப்ரி கையில் ஏன்? ஓமல்பே  தேரர்

‘அலி சப்ரியால்  சமூகத்துக்கு கடும் நெருக்கடி வரும்’

ஜூன் முதல் ஓகஸ்ட் வரைக்குமான சிறிய வரவு செலவுத் திட்டம் அல்லது இடைக்கால கணக்கறிக்கை இம் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்த விடயம் குறித்து நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிரமம் காரணமாக 2020 ஐ போன்று இடைக்கால கணக்கறிக்கை கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்கின்றது.

எவ்வாறாயினும், புதிய வரிவிதிப்பு முறையோ அல்லது வரிச் சீர்திருத்தங்களையோ இடைக்கால கணக்கறிக்கை மூலம் அறிமுகப்படுத்துவதற்கு வழி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற அனுமதிக்கு உட்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வரி அதிகரிப்பை நிதி அமைச்சர் முன்மொழிய முடியும்.

கொரோனா தொற்றை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், 2020 மார்ச் முதல் மே வரை மூன்று மாத காலத்திற்காக 1224 பில்லியன் ரூபாய்க்கான இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதுவும் போதாதமையை அடுத்து ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 2020 ஜூன் முதல் ஓகஸ்ட் வரையிலான 1043 பில்லியனுக்கு மற்றொரு சிறிய வரவு செலவுத் திட்டம் நாடளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நிதி அமைச்சர் ஏழு தலையார் 2022ம் ஆண்டுக்காகத் தயாரித்த வரவு செலவுத் திட்டம் தற்போது செல்லாக் காசாகி விட்டது. அதனால் புதிதாக தற்போதுதய நிதியமைச்சர் அலி சப்ரி மினி வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்க இருக்கின்றார்.

அந்த வரவு செலவுத் திட்டத்துடன் சப்ரியும் அவர் சார்ந்த சமூகமும் விமர்சனத்துக்கு இலக்காகும் என்று நாம் முன்பு செசால்லி இருந்தோம் . சில தினங்களுக்கு முன்னர் ஓமல்பே சோபித தேரர் அலிசப்ரி தொடர்பில் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்ததுடன், இந்த நாட்டில் நிதியும் நீதியும் ஓருவர் கையில் கொடுக்கப்பட என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ராஜபக்ஸாக்களின் சுரண்டல்களையும் கொள்ளையையும் பாதுகாக்கத்தான் அவருக்கு இந்த இரு பதவிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது என்று அவர் கூறுகின்றார்.

ராஜபக்ஸாக்களின் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற ஒருவராகத்தான் ஓமல்பே சோபித தேரர் இதன் மூலம் சிங்கள சமூத்துக்கு  சப்ரியை அடயாளப்படுத்தி இருக்கின்றார். அவர் கருத்துக்கு சப்ரிதான் பதில் கொடுக்க வேண்டும்.

 

Previous Story

ராஜபக்சர்கள் தன் மீது கடும் அச்சத்தில் - சரத் பொன்சேகா

Next Story

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணி: பெரும் தொகை பண மோசடி-சர்வதேச ஊடகம் தகவல்