நாளை கொழும்பு வரும் காவிகள் படை

நாளை  1000 பேரைக் கொண்ட காவிகள் படை கொழும்பு நோக்கி வருகின்றது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடை பெற்று வருகின்றன. இப்படிக் கூறுகின்றார் ஓமல்பே சேபித தேரர்.

அரசியல் யாப்பில் இல்லாத ஒரு வழியில் ஜனாதிபதி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்ச்சியில் இறங்கி இருக்கின்றார். இதற்குத் தாம் இணங்க மாட்டோம்.

நாளை இது பற்றி கொழும்பில் கூடி தீர்மனங்களை எடுத்து நாம் ஊர்வலம் நடத்த இருக்கின்றோம். இதன் பின்னரும் எம்மை ஏமாற்ற வேண்டாம் பிரதமர் மஹிந்த பதவி விலகித்தான் புதிய அரசு அமைய வேண்டும்.

எமது இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால் நாம் மாற்று நடவடிகைகளிலும் இறங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

எப்படியும் இவர்கள் விடயத்தில் ஆளும் தரப்பும் போராட்டக்காருகளும் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது நமது கருத்து.

 

Previous Story

சர்வதேச அதிசயம் பாருங்கள்!

Next Story

பாண் 400 ரூபா-நாமல்