அமைச்சர் நசீருக்கு மு.கா. ஹக்கீம் ஒழுக்காற்றாம்! நம்பலாமா?

-நஜீப்-

நீண்டநாள் அமைச்சர் கனவில் இருந்து வந்த ஹாபீஸ் நசீருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கின்றது என்று நாம் நெடுநாளாக சொல்லி இருந்தோம். இன்று அது கிடைத்திருகிக்ன்றது. இப்போது மு.கா.தலைவர் ஹக்கீம் அவருக்கு எதிரான ஒழுக்காற்று என்று கதை விடுகின்றார்.

இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை ஹக்கீம் எடுக்கப் போய் மூக்குடைபடுவதற்கும் நிறைய வாய்ப்புக்கள் இருந்து வருகின்றது. அதற்கான கதைகள் காரணங்கள் இருக்கின்றன. எனவே ஹக்கீம் சொன்னபடி என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்று மு.கா. அதரவாலர்களும் ஏனையோரும் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

பொருத்துப் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று. அநேகமாக ஒழுக்காற்று என்ற பெயரில் ஒரு குட்டி நாடகம்தான் அரங்கேரும் என்று நாம் நம்புக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து  முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Previous Story

மைத்திரிக்கு சுரேன் ராகவன் ஆப்பு

Next Story

இலங்கை கவிழ்ந்ததற்கு காரணம்: அலி சாப்ரி