இது நீதியின் நிஜக் கதை!

-நஜீப்-

எந்த ஒரு நாட்டிலும் நிதி அமைச்சர் என்பது செல்வாக்கான ஒரு பதவி. ஆனால் நமது நாட்டில் அந்தப் பதவியை ஜனாதிபதி கொடுப்பதற்கு ஆள் தேடித் திரிகின்றார். ஏழு தலையார் அந்தப் பதவியை கையில் எடுத்து மாய வித்தை காட்டுவார் என்று ஜனாதிபதி அண்ணன் தம்பியை நம்பினார்.

அவரது ஆதரவாலர்கள் கூட ஆள் பதிவியேற்றல் அலாவுத்தீனின் அற்புத விளக்கில்தான் காரியங்கள் நடக்கும் என்று கதைகள் கூடக் கட்டவிழ்த்து விடப்பட்டது. பதவியேற்றதும் ஏழுதலை, தறுதலையானது. தம்பி பீ.ஆரிடமிருந்து  நிதியைப் பிடுங்கிய ஜனாதிபதி அண்ணன் அவர் இவர் என்று அதைக் கொடுக்க ஆள் தேடினார். யாரும் ஏற்காததால் நீதி வேலை பார்த்த சப்ரியிடம் கட்டயப்படுத்தி காசுக்குப் பொறுப்பான அமைச்சைக் கொடுக்க அந்த இரவு முழுக்க ஆளுக்குத் தூக்கமே வரவில்லையாம்.

இது நிஜக் கதை. அடுத்த நாள் விடிய அவர் பதிவியை இராஜிநாமச் செய்ய இப்போது நிதி அமைச்சு யாருக்கு வேண்டும் யாருக்கு வேண்டும்? எதிர்க் கட்சியிலிருந்தாவது இதனை யாராவது எடுத்துக் கொள்ளுங்கள் என்று அங்காடி வியாபாரி போல் நல்லாச் செய்தவர் ஆள் தேடி இந்த செய்தியை எழுதும் வரை கூவிக் கொண்டிருக்கின்றார்.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 10.04.2022

Previous Story

மக்கள் புரட்சிப் போராட்டம்! ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!

Next Story

GOTA GO HOME: போராட்ட களத்தில் இப்தார்