சமூக ஊடக செயற்பாட்டாளர்  திசர அனுருத்த நேற்றிரவு  கடத்தல்!

நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட வேலைத்திட்டத்தின் முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளராக கருதப்படும் திசர அனுருத்த பண்டாரவை நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்றவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்திச் செல்வதற்காக சிவில் உடையில் வீட்டுக்கு சென்றவர்கள் தாம் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் என தம்மை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து திசர அனுருத்த பண்டாரவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் விசாரித்துள்ளனர். எனினும் அப்படியான எவரும் கைது செய்யப்படவில்லை பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞர்,முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இன்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous Story

இந்தியாவில்  இருந்து: 40000 ஆயிரம் டன் டீசல் வந்தது; அடுத்து அரிசி

Next Story

ஆர்ப்பாட்டம் மக்கள் உரிமை - அமெரிக்க தூதுவர்