இம்ரான் கான்:நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆனது?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நிதி நெருக்கடியை பாக். பிரதமர் இம்ரான் கானால் சமாளிக்க முடியவில்லை இந்தச் சூழலில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் அடுத்த சில நாட்களில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்கட்சியிலேயே இம்ரான் கான் மீதான எதிர்ப்பு அதிகரித்து வருவதால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது சிக்கல் மிகுந்ததாக மாறி உள்ளது. இதற்கிடையே இம்ரான் கான் 50க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் திடீரென மயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது இம்ரான் கான் ஆட்சியைத் தக்க வைப்பதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கெடுப்பு இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாக். நாட்டில் பெரியளவில் அரசியல் குழப்பம் நிலவும் சூழலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து, அது இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார். என்ன நடக்கும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகவும் 161 உறுப்பினர்கள் வாக்களித்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான அடுத்த அமர்வு வரும் மார்ச் 31ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம் இம்ரான் கான் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது தெரிந்து விடும் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத், இருப்பினும் இதையெல்லாம் கண்டு இம்ரான் கான் பயப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நடத்தாது இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இம்ரான் கானை அரசியலில் இருந்து ஒதுக்கித் தள்ளச் சிலர் நினைக்கிறார்கள். நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்து பேரணியில் மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர். இதன் பின்னர் அவரை அரசியலிலிருந்து ஒதுக்க நினைத்தால் அது நடக்காது” என்றார். கடந்த 2018இல் புதிய பாகிஸ்தானைப் படைப்போம் என்ற முழக்கத்துடன் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார். இருப்பினும், அவரால் எதிர்பார்த்த அளவுக்குச் சிறந்த ஆட்சியை அளிக்க முடியவில்லை.

இதனால், அவருக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் முதல்வர் ராஜினாமா முன்னதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதல்வர் உஸ்மான் புஸ்தார் தனது முதல்வர் பதவியில் ராஜினாமா செய்தார். பஸ்தாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, வீட்டு வசதி அமைச்சரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவைட் (PML-Q) தலைவருமான தாரிக் பஷீர் சீமா, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார்.

இம்ரான் கான் அரசில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவைட் கூட்டணியில் உள்ள நிலையில், அவரது ராஜினாமா இம்ரான் கானுக்கு அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. அடுத்து யார் அதேநேரம் பாஸ்தாரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகரும், PML-Q தலைவருமான சவுத்ரி பெர்வைஸ் இலாஹி, பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்து, இம்ரான் கானுக்கு தங்கள் ஆதரவு தொடரும் என்று அறிவித்தார்.

அடுத்து சவுத்ரி பெர்வைஸ் இலாஹியை பஞ்சாப் முதலமைச்சராக நியமிக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பிரச்சினையைத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரம் ஆட்சியைத் தக்க வைக்கக் குறைந்தது 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

Previous Story

இம்ரான் கான் தலைவிதி இன்னும் சில மணி நேரங்களில் முடிவாகும்.!

Next Story

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு - ஜோன்ஸ்டன்